முகப்புகோலிவுட்

ஜி.வி. பிரகாஷ் குரலில் "High and Dry" - பாடலை வெளியிட்டு வாழ்த்திய 'கர்ணன்'..!

  | September 18, 2020 11:15 IST
High And Dry

துனுக்குகள்

  • ஐங்கரன், ஆயிரம் ஜென்மங்கள், அடங்காதே மற்றும் ட்ராப் சிட்டி என்னும்
  • சிறந்த நடிகராக மட்டும் இல்லாமல் அதிசிறந்த இசைமைப்பாளராகவும் அவர்
  • High and Dry என்ற இந்த பாடலை ஏற்கனவே குறிப்பிட்டது போல பிரபல நடிகர் தனுஷ்
ஐங்கரன், ஆயிரம் ஜென்மங்கள், அடங்காதே மற்றும் ட்ராப் சிட்டி என்னும் ஹாலிவுட் திரைப்படம் உள்பட சுமார் 7-க்கும் மேற்பட்ட படங்கள் பிரபல நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளிவர காத்திருக்கிறது. இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டே உருவான பிரபல இயக்குநர் வசந்தபாலனின் 'ஜெயில்' படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்க ஒப்பந்தமானார், அவருக்கு ஜோடியாக ‘எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற அபர்ணதி நடிக்கிறார்.

ஜி.வி. பிரகாஷ் அவர்கள் இசைப்புயல் ரகுமானின் சகோதரி, பிரபல பாடகி ஏ.ஆர்.ரெய்ஹானா அவர்களின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. 2006ம் ஆண்டு வெளியான 'வெளியில்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக களமிறங்கிய இவர். 2015ம் ஆண்டு வெளியான டார்லிங் படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமானார். இந்த 2020ம் ஆண்டு இவர் நடிப்பில் 5-க்கும் அதிகமான படங்கள் வெளியாக காத்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த நடிகராக மட்டும் இல்லாமல் அதிசிறந்த இசைமைப்பாளராகவும் அவர் திகழ்ந்து வருகின்றார். இந்நிலையில் 'கோல்டு நயிட்ஸ்' என்ற இன்டர்நேஷனல் இசை ஆல்பம் ஒன்றில் பாடியுள்ளார் ஜி.வி.பிரகாஷ். High and Dry என்ற இந்த பாடலை ஏற்கனவே குறிப்பிட்டது போல பிரபல நடிகர் தனுஷ் அவர்கள் நேற்று வெளியிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com