முகப்புகோலிவுட்

கவர்ச்சி உடையில் மனோசித்ரா..! வைரலாகும் ‘ரூம்’ மோஷன் போஸ்டர்..

  | January 23, 2020 11:04 IST
Room

துனுக்குகள்

 • ரூம் திரைப்படத்தை பத்மா மகன் எழுதி இயக்குகிறார்.
 • இப்படத்தை V House ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது
 • இப்படத்துக்கு வினோத் எஜமான்யா இசையமைக்கிறார்.
ரூம் திரைப்படத்தின் கவர்ச்சிகரமான மோஷன் போஸ்டர் வெளியாகி வைரலாகிவருகிறது..

ரூம் திரைப்படத்தை பத்மா மகன் எழுதி இயக்குகிறார். இப்படத்தில் அபிஷேக் வர்மா மற்றும் ‘அவள் பெயர் தமிழரசி' திரைப்படத்தில் நடித்த மனோசித்ரா முன்னணி கதாப்பாத்திரங்களில் ஜொடியாக நடிக்கின்றனர். ரொமாண்டிக் கதையான இப்படத்தை V House ப்ரொடக்ஷன்ஸ் பேனரில் சுரேஷ் காமாட்சி மற்றும் அஸ்வின் இணைந்து தயாரிக்கின்றனர்.

இபடத்துக்கு எம்.எஸ் பிரபு கேமரா வேலைகளைக் கையாள, சி.எஸ் பிரேம் குமார் படத்தொகுப்பு செய்கிறார். மேலும், வினோத் எஜமான்யா இப்படத்துக்கு இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என நான்கு தென்னிந்திய மொழிகளில் இப்படம் தயாராகிறது. மேலும், இந்த ஆண்டின் இறுதியில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில், மனோசித்ரா உள்ளாடைகள் மட்டும் அணிந்திருக்கும் அந்த கவர்ச்சியான மோஷன் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com