முகப்புகோலிவுட்

'நாயகனாக அசத்தும் பஜ்ஜி' - மிரட்டலாக வெளியான 'Friendship' பட 'Glimpse'..!!

  | July 31, 2020 07:38 IST
Friendship

துனுக்குகள்

 • பாகிஸ்தானின் தற்போதைய பிரதமராக இருப்பது ஒரு மிக சிறந்து கிரிக்கெட் வீரர்
 • அண்மைக்காலமாக தமிழ் மொழியில் ட்வீட் போட்டு அசத்தும் ஹர்பஜன்
 • மேலும் இந்த Glimpse காட்சியை பிரபல நடிகர் ராணா தகுபதி தனது
கிரிக்கெட் விளையாட்டில் இருந்து அரசியல் மற்றும் சினிமா ஆகிய துறைகளுக்கு சென்றவர்கள் சிலர். பாகிஸ்தானின் தற்போதைய பிரதமராக இருப்பது ஒரு மிக சிறந்து கிரிக்கெட் வீரர் என்பது நாம் அறிந்ததே. அதே போல சடகோபன் ரமேஷ் உள்ளிட்ட சில கிரிக்கெட் வீரர்கள் சினிமாவில் அவ்வப்போது வலம்வருவதும் உண்டு. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பஜ்ஜி என்று அனைவரும் செல்லமாக அழைக்கும் ஹர்பஜன் சிங் அவர்களும் தற்போது திரையுலகில் ஹீரோவாக களமிறங்கி உள்ளார். 

அண்மைக்காலமாக தமிழ் மொழியில் ட்வீட் போட்டு அசத்தும் ஹர்பஜன் Friendship என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் பிக் பாஸ் புகழ் லாஸ்லியாவுடன் நடித்துள்ளார். இந்த படத்தில் பிரபல நடிகர் சதிஷ் அவருக்கு நண்பராக நடித்துள்ளார் என்பது சிறப்பம்சம். இந்த படத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் பிரபல நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுன் அவர்களும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கி தயாரிக்கின்றனர். 

ஏற்கனவே இந்த படம் குறித்த பல சுவாரசிய அப்டேட்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் நேற்று உலக முழுவதும் நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் Friendship படம் குறித்த ஒரு சிறிய GLIMPSE நேற்று மாலை வெளியானது. மேலும் இந்த Glimpse காட்சியை பிரபல நடிகர் ராணா தகுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.  

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com