முகப்புகோலிவுட்

"அகாட்டி காம்ப்லெக்ஸ்" - First Look வெளியிட்ட 'திரௌபதி' மோகன்

  | March 31, 2020 17:44 IST
Agaati Complex

துனுக்குகள்

 • இந்நிலையில் இயக்குநர் மோகன் தனது நெருங்கிய நண்பரும்
 • இது குறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்
 • First look வெளியிடுவதை பெருமையாக கருதுகிறேன்
ரிச்சார்ட் ரிஷி மற்றும் ஷீலா ராஜ்குமார் நடிப்பில் ஜி. மோகன் இயக்கத்தில் அண்மையில் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை சந்தித்த படம் தான் ‘திரௌபதி'. பல சர்ச்சைகளுக்கு உள்ளான இப்படம் ‘நாடகக் காதல்' பற்றிய கதை என்று கூறப்படுகிறது. பலரும் இதனை சாதிய படம் என்றும், குறிப்பிட்ட சமூகத்தைச் சாடும் படம் என்றும் பல கடுமையான விமர்சனங்கள் வைத்துள்ளனர்.

அதேபோல், பிரபல பத்திரிக்கையான ஆனந்த விகடன் இந்த படத்திற்கு 29 மதிப்பெண் கொடுத்து. அதன் ட்விட்டர் பக்கத்தில் “தன் தரப்பு நியாயத்தை சினிமாவழி பேசுவதில் தவறில்லை. அதற்காக எதிர்த்தரப்பை மிகவும் தரம் தாழ்த்திச் சித்திரித்து, முழு எதிரிகளாக முன்னிறுத்துவது அறமில்லையே! ‘திரௌபதி' அறம் பேசவில்லை!” என்று அப்போது பதிவிட்டது. இந்த பதிவிற்கு தனது கட்டமான பதிலையும் இந்த படத்தின் இயக்குநர் அப்போது அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இயக்குநர் மோகன் தனது நெருங்கிய நண்பரும் இயக்குநர் ஏ.எல் விஜயிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்து தற்போது இயக்குநராக மாறியுள்ள கௌதமின் "அகட்டி காம்ப்லெக்ஸ்" என்ற திரைப்படத்தின் first look போஸ்ட்டரை நேற்று வெளியிட்டார். இது குறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் "இயக்குநர் திரு AL விஜய் அவர்களின் தலைவா மற்றும் தாண்டவம் திரைப்படங்களில் துணை இயக்குநராக பணிபுரிந்து இந்தியாவின் youngest adfilm maker என்ற பெருமை கொண்ட தம்பி @gautham988 அவர்கள் வெள்ளித்திரையில் கால் பதிக்கும் முன்னோட்ட முயற்சி.. First look வெளியிடுவதைப் பெருமையாகக் கருதுகிறேன்.." என்று குறிப்பிட்டுள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com