முகப்புகோலிவுட்

சேவை வரி விவகாரம் - ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு அனுப்பட்ட நோட்டீஸ்

  | March 01, 2020 18:56 IST
Gst

துனுக்குகள்

 • ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு அனுப்பட்ட நோட்டீஸ்
 • 1 கோடியே 84 லட்சம் ரூபாயை சேவை வரி
 • சில தினங்களுக்கு முன்பு, GST இணை இயக்குனர்
2006ம் ஆண்டு வெளியான வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ்குமார். ஆயிரத்தில் ஒருவன், மதராசப்பட்டினம் போன்ற பண்டங்களில் இவருடைய இசை பலராலும் ரசிக்கப்பட்டது. நடிப்பிலும் ஆர்வம் கொண்டிருந்த பிரகாஷ் குமார் அவ்வப்போது சில கௌரவ தோற்றங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான டார்லிங் படத்தின் மூலம் இவர் தமிழ் திரையுலகில் ஹீரோவாக களமிறங்கினார். 

இந்நிலையில் தற்போது, ஜி.வி.பிரகாஷ்குமார், தனது படைப்புகளின் காப்புரிமையை நிரந்தரமாக அந்த அந்த படத் தயாரிப்பாளர்களுக்கு வழங்கியதற்காக, சுமார் 1 கோடியே 84 லட்சம் ரூபாயைச் சேவை வரியாகச் செலுத்த வேண்டும் என சில தினங்களுக்கு முன்பு, நிஷிஜி இணை இயக்குநர் ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

தற்போது, நிஷிஜி இணை இயக்குநர் அனுப்பிய இந்த நோட்டீசை எதிர்த்து ஜி.வி.பிரகாஷ் குமார் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தொடரப்பட்ட அந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், மனுவுக்கு பதிலளிக்கும்படி, நிஷிஜி துறைக்கு உத்தரவிட்டு அந்த விசாரணையை தற்போது தள்ளி வைத்துள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com