முகப்புகோலிவுட்

'எழுத ஆரமிச்சுட்டேன்..' - ட்விட்டரில் அடுத்த பட அறிவிப்பை கொடுத்த செல்வராகவன்

  | February 27, 2020 14:13 IST
Selvaragavan

செல்வராகவனின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களை படு குஷியில் ஆழ்த்தியுள்ளது

துனுக்குகள்

 • இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களை படு குஷியில் ஆழ்த்தியுள்ளது
 • செல்வராகவன் ஆர்வம் காட்டாமல் இருந்தார்
 • சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான என்.ஜி.கே
புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் என்று பல தரப்பட்ட வித்தியாசமான கதையம்சங்களைக் கொண்ட படங்களை இயக்கியவர் இயக்குநர் செல்வராகவன். இவர் இயக்கிய பல படங்கள் வியாபார ரீதியாகப் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை என்றபோதும் ரசிகர்கள் இவர் படத்தை எப்போதும் கொண்டாட மறந்ததில்லை. கடந்த ஆண்டு மே மாதம் சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான என்.ஜி.கே. ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. 

இந்த படத்திற்குப் பிறகு அடுத்த படம் எடுப்பதில் பல மாதங்களாக செல்வராகவன் ஆர்வம் காட்டாமல் இருந்தார். ஏற்கனவே செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் நெஞ்சம் மறப்பதில்லை மற்றும் சந்தானம் நடிப்பில் மன்னவன் வந்தானடி ஆகிய படங்கள் உருவாகி வெளிவராமல் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனது அடுத்த படம் குறித்த ஒரு தகவலை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் செல்வராகவன். 

நான் கதை எழுதும்போது துப்பாக்கி தோட்டாக்கள் வெடித்தன என்று தொடங்கி தனது அடுத்த படத்தின் கதையை எழுதத் தொடங்கி விட்டதாகக் குறிப்பிட்டுள்ளார் அவர். ஏற்கனவே ஆயிரத்தில் ஒருவன் மற்றும் புதுப்பேட்டை ஆகிய படங்களில் இரண்டாம் பாகத்தைக் கண்டிப்பாக எடுப்பேன் என்று அவர் கூறியுள்ள நிலையில், தற்போது செல்வராகவனின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களைப் படு குஷியில் ஆழ்த்தியுள்ளது. 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com