முகப்புகோலிவுட்

‘சூரரைப் போற்று’ டீஸர் ரெடி..! சூப்பர் அப்டேட் தந்த ஜி.வி. பிரகாஷ்..!

  | November 12, 2019 13:13 IST
Soorarai Pottru

துனுக்குகள்

 • சூரரைப் போற்று சூர்யாவின் 38-வது படமாகும்.
 • இப்படத்தை சுதா கொங்காரா இயக்கியுள்ளார்.
 • ஜி.வி.பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

சூர்யாவின் ‘சூரரைப் போற்று' திரைப்படத்தின் டீஸர் வெளியீடு குறித்து இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் சுவாரஸ்யமான தகவலை அளித்துள்ளார்.

‘இறுதிச் சுற்று' பட இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘சூரரைப் போற்று'. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி நடிகிறார். மேலும் இப்படத்தில் ஜாக்கி ஷராஃப், மோகன் பாபு, கருணாஸ் உள்லிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இரு தினங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளைக் கொண்ட இந்த படத்தின் அடுத்த அப்டேட்டை இப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். 2020, ஜனவரி வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் டீசர் வெளியீடு குறித்த அப்டேட் தான் அது.

ஜி.வி.பிரகாஷ் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், சூரரைப் போற்று திரைப்படத்தின் டீஸருக்காக, ஒரு ஸ்பெஷல் தீம்-ஐ கம்போஸ் செய்து வருவதாகவும், மாரா என்று அழைக்கபடும் அந்த தீம் விரைவில் வெளியாகும் என்றும் பதிவிட்டிருந்தார். தற்போது, ரசிகர்கள் பலரும் இந்த டீஸருக்காக காத்திருக்கின்றனர்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com