முகப்புகோலிவுட்

ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் ‘டிராப் சிட்டி’; வைரலாகும் டீஸர்.!

  | August 12, 2020 20:54 IST
Vijay Sethupathi

‘ட்ராப் சிட்டி' என்பது இன்றைய ஹிப்ஹாப் இசை கலாச்சாரத்தை ஒரு கலைநயம் மிக்க வகையில் எடுத்துக்காட்டும் திரைப்படமாகும்.

நடிகரும் இசை அமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ்குமார் இறுதியாக சசியின் இயக்கத்தில் பிரபல நடிகர் சித்தார்த்துடன் இணைந்து 'சிவப்பு மஞ்சள் பச்சை' மற்றும் 100 % காதல் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து ஆயிரம் ஜென்மங்கள், ஐங்கரன், அடங்காதே, ஜெயில், காதலைத் தேடி நித்யாநந்தா, காதலிக்க யாரும் இல்லை, 4G, காதலிக்க யாரும் இல்லை, பேச்சலர் என கைவசம் பல படங்களை வைத்துள்ளார். 

இந்நிலையில், அவர் ஹாலிவுட்டில் தயாராகும் ‘ட்ராப் சிட்டி' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் அண்மையில் வெளியானது. இதன் மூலம் முதல் ஜி.வி.பிரகாஷ் முதலாக ஹாலிவுட்டில் கால் பதிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘ட்ராப் சிட்டி' என்பது இன்றைய ஹிப்ஹாப் இசை கலாச்சாரத்தை ஒரு கலைநயமிக்க வகையில் எடுத்துக்காட்டும் திரைப்படமாகும், மேலும் போதைப் பொருளை வியாபாரம் செய்யும் கொள்ளைக் கூட்டத் தலைவனுக்கு எதிராக, சாதாரண மனிதனாகப் போராடும் ராப்பரின் கதையைச் சொல்கிறது. சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் Official Poster வெளியானது.

இந்நிலையில், நேற்று இப்படத்தின் சுவாரசியமான டீஸர் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. முன்னதாகவே அறிவித்திருந்தபடி, இதனை ‘மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரிக்கி பர்ச்சலின் இயக்கும் இப்படத்தை தமிழரான டெல் கே. கணேசன் தயாரிக்கிறார். அவர் முன்னதாக ‘டெவில்ஸ் நைட்' திரைப்படத்தை KYBA பிலிம்ஸ் பேனரின் கீழ் தயாரித்துள்ளார். அப்படத்தில் மூத்த தமிழ் நடிகர் நெப்போலியனையும் ஹாலிவுட்டில் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com