முகப்புகோலிவுட்

ஹாலிவுட்டில் களமிறங்கும் ஜி.வி. பிரகாஷ்..!

  | February 05, 2020 12:57 IST
Gv Prakash

ஜி. வி. பிரகாஷ், நடிகர் பிராண்டன் டி. ஜாக்சன் மற்றும் தயாரிப்பாளர் டெல் கே. கனேசனுடன் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

இசையமைப்பாளர்-நடிகர் ஜி.வி. பிரகாஷ் ‘ட்ராப் சிட்டி' திரைப்படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார்.

நடிகரும் இசை அமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ்குமார் கடைசியாக சசியின் இயக்கத்தில் சித்தார்த்துடன் இணைந்து 'சிவப்பு மஞ்சள் பச்சை' திரைப்படத்தில் நடித்திருந்தார். அதையடுத்து ஆயிரம் ஜென்மங்கள், ஐங்கரன், அடங்காதே, ஜெயில், காதலைத் தேடி நித்யாநந்தா, காதலிக்க யாரும் இல்லை, 4G, காதலிக்க யாரும் இல்லை, பேச்சலர் என கைவசம் பல படங்களை வைத்துள்ளார். இந்நிலையில், அவர் ஹாலிவட்டில் தயாராகும் ‘ட்ராப் சிட்டி' திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதன் மூலம் முதல் முதலாக ஹாலிவுட்டில் கால் பதிக்கிறார்.

‘ட்ராப் சிட்டி' என்பது இன்றைய ஹிப்ஹாப் இசை கலாச்சாரத்தை ஒரு கலைநயமிக்க வகையில் எடுத்துக்காடும் திரைப்படமாகும், மேலும் போதைப் பொருளை வியாபாரம் செய்யும் கொள்ளைக் கூட்டத் தலைவனுக்கு எதிராக, சாதாரன மனிதனாகப் போராடும் ராப்பரின் கதையைச் சொல்கிறது. ரிக்கி பர்ச்சலின் இயக்கும் இப்படத்தை தமிழரான டெல் கே கனேசன் தயாரிக்கிறார். அவர் முன்னதாக ‘டெவில்ஸ் நைட்' திரைப்படத்தை KYBA பிலிம்ஸ் பேனரின் கிழ் தயாரித்துள்ளார். அப்படத்தில் மூத்த தமிழ் நடிகர் நெப்போலியனையும் ஹாலிவுட்டில் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

‘ட்ராப் சிட்டி' திரைப்ப்டத்தில் பிராண்டன் டி. ஜாக்சன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார், இவர் முன்னதாக டிராபிக் தண்டர், பெர்சி ஜாக்சன் தொடர் போன்ற பிரபலமான படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில், ஜி. வி. பிரகாஷ், நடிகர் பிராண்டன் டி. ஜாக்சன் மற்றும் தயாரிப்பாளர் டெல் கே. கனேசனுடன் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.


    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்