முகப்புகோலிவுட்

“அசுரன்” படத்துடன் வெளியாகும் ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம்!

  | September 12, 2019 20:06 IST
100 Percent Kaadhal

துனுக்குகள்

  • இரண்டு படங்களும் வரும் அக்டோபர் 4ம் நாள் வெளியாக இருக்கிறது
  • இரண்டு படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார்
  • நாகசைத்தன்யா நடிப்பில் கடந்த ஆண்டு வந்த படத்தின் ரீமேக் 100% காதல்
ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்திருக்கும் இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாக இருக்கிறது.
 
சித்தார்த் மற்றும் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘சிவப்பு மஞ்சள் பச்சை'. இப்படத்தை அடுத்து எம்.எம். சந்திரமௌலி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘100 சதவீதம் காதல்' இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக ஷாலினி பாண்டே நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் அமைத்தள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் வரும் அக்டோபர் 4ம் நாள் திரைக்கு வருகிறது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
 
அதே நாளில் ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்து வெற்றி மாறன் இயக்கி இருக்கும் ‘அசுரன்' படம் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் தனுஷ், மஞ்சுவாரியர், பசுபதி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பூமணியின் வெட்கை நாவலை அடிப்படையாக வைத்து உருவாகி வரும் இப்படமும் வருகின்ற அக்டோபர் 4ம் நாள் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் முதல் முறையாக ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ள இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாக இருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
 
 
 
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்