முகப்புகோலிவுட்

“குடியும் காதலும் உடல் நலத்திற்கு கேடு” ‘பேச்சலர்’ படக்குழுவின் காதலர் தின வாழ்த்து..!

  | February 14, 2020 16:00 IST
Love Is Injurious To Health

ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவி செய்ய, சான் லோகேஷ் படத்தொகுப்பு செய்கிறார்.

ஜி.வி. பிரகாஷ் கதாநாயகனாக் நடிக்கும் பேச்சலர் படக்குழு, சற்று வித்தியாசமான காதலர் தின வாழ்த்தை தெரிவித்துள்ளது.

அறிமுக இயக்குனர் சதிஷ் செல்வபிரகாஷ் இயக்கத்தில் இசையமைப்பாளர்-நடிகர் ஜி.வி. பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் 'Bachelor'. ரொமாண்டிக் கதையான இப்படத்தை Axess Film factory பேனரில் ஜி. டில்லி பாபு தயாரிக்கிறார். இப்படத்தில் ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக மாடல் அழகியான திவ்யபாரதி நடிக்கிறார்.

காதலர் தினமான இன்று பேச்சலர் படக்குழு ஒரு வித்தியாசமான வாழத்தையும், ஜிவி பிரகாஷின் வேறொரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது. அந்த ட்விட்டர் பதிவில் “குடியும் காதலும் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவி செய்ய, சான் லோகேஷ் படத்தொகுப்பு செய்கிறார். இந்தாண்டு இறுதியில் வெளியாகும் என எதிரபார்க்கப்படும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. ஆனால், அந்த போஸ்டர் சர்ச்சைக்கு உள்ளாகி கடுமையான விமர்சனங்களைப் பெற்றது. அதையடுத்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து 2-வது போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com