முகப்புகோலிவுட்

4 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த ‘காத்தோடு காத்தானேன்’ பாடல்.!

  | July 01, 2020 14:07 IST
Dhanush

‘காத்தோடு காத்தானேன்' எனும் இப்பாடலை கபிலன் எழுதியிருக்க, நடிகர்கள் தனுஷ் மற்றும் அதிதி ராவ் ஹைதாரி பாடியுள்ளனர்.

வசந்த பாலன் இயக்கிய ‘வெயில்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கியவர் ஜி.வி.பிரகாஷ். இப்போது ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, வசந்த பாலன் இயக்கத்தில் ‘ஜெயில்' என்ற திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ளார். Krikes Cine Creations தயாரிக்கும் இப்படத்தில், ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக விஜய் டிவியின் ‘நம்ம வீட்டு மாப்பிள்ளை' ரியாலிட்டி ஷோ புகழ் அபர்நதி நடிக்கிறார், மேலும் ராதிகா சரத்குமார் ஒரு முக்கிய துணை வேடத்தில் நடிக்கிறார். மேலும், ‘பசங்க' பாண்டி, ‘பாகுபலி' புகழ் பிரபாகர் ஆகியோர் நடிக்கின்றனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, 'ஜெயில்' படத்திற்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்கிறார், ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளனர்.

இப்படத்திலிருந்து முதல் சிங்கிள் பாடல் அண்மையில் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக  வெளியிட்டார். ‘காத்தோடு காத்தானேன்' எனும் இப்பாடலை கபிலன் எழுதியிருக்க, நடிகர்கள் தனுஷ் மற்றும் அதிதி ராவ் ஹைதாரி பாடியுள்ளனர்.

தற்போது இணையத்தில் செம வைரலாகிவரும் இந்த பாடல் youtube தளத்தில் 4 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஜி.வி. பிரகாஷ்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com