முகப்புகோலிவுட்

ஆக்ஷ்ன் படத்தில் அதிரடியாக களம் இறங்கும் ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம்!

  | September 13, 2019 15:40 IST
Gv Prakash

துனுக்குகள்

 • இப்படத்தில் கல்லூரி மாணவனாக நடிக்கிறார் ஜி.வி.பிரகாஷ்
 • வர்ஷா பொல்லம்மா இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார்
 • வெற்றிமாறன் இந்த பூஜை விழாவில் கலந்துக்கொண்டார்
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் அடுத்து உருவாகும் படத்தின் பூஜை இனிதே தொடங்கியது.
 
சிறந்த கதைக்களங்களுடைய படங்களை தேர்வு செய்து தயாரித்து வரும் தயாரிப்பு நிறுவனம் கே புரொடக்ஷ்ன். இந்நிறுவனத்தின் சார்பாக எஸ்.என். ராஜராஜன் தயாரிக்கு புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கிறார்.
 
இந்த படத்தை இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக இருந்த மதிமாறன் புகழேந்தி இயக்குகிறார். கல்லூரி மாணவனுக்கு கல்லூரிக்கு வெளியே நடக்கும் பிரச்னையை பற்றி பேசும் அதிரடியான திரைக்கதையாக இப்படம் உருவாக இருக்கிறது. கல்லூரி மாணவனாக நடிக்கும் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக வர்ஷா பொல்லம்மா நடிக்கிறார். இவர் ‘சீமதுறை', ‘96', ‘பிகில்' உள்ளிட்ட படங்களில் நடித்தவர். இவர்களுடன் வாகை சந்திர சேகர், குணா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
 
கதாநாயகனாக நடிக்கும் ஜி.வி. இப்படத்தின் இசை பணியையும் சேர்த்து கவனிக்கிறார். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். இவர் “அண்ணனுக்கு ஜே”, “வெள்ளை யானை” படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தவர். படத்தொகுப்பை எஸ்.இளையராஜா கவனிக்கிறார்.
 
இந்த படத்தின் பூஜை மற்றும் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குனர்கள் வெற்றிமாறன், சமுத்திரகனி, சுப்ரமணிய சிவா, சரவணன், இளன் உள்ளிட்டபலர் கலந்துகொண்டனர். அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது ட்விட்டர் பக்கத்தில் வைரலாகி வருகிறது.
 
 
 
 
 
 
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com