முகப்புகோலிவுட்

விஜய் சேதுபதி படத்தில் அறிமுகமாகும் ஜி.வி. பிரகாஷ் தங்கை.!

  | May 25, 2020 12:54 IST
Saindhavi

ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி பவானியை வாழ்த்தியுள்ளனர்.

விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள 'க/பெ. ரணசிங்கம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இந்த டீஸருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், சுவாரஸ்யமான அம்சம் என்னவென்றால், இப்படத்தில் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷின் சகோதரி பவானி ஶ்ரீ ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

டீஸரைப் பார்க்கும்போது, அவர் விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷின் குடும்பத்தில் ஒருவராக முக்கிய பாத்திரத்தில் நடிப்பதாகத் தெரிகிறது. பவானி ஶ்ரீ ஏற்கனவே அமலா அக்கினேனியின் வலைத் தொடரான High Priestess-ல் நடித்துள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் மற்றும் அவரது மனைவியும் பாடகியுமான சைந்தவி இருவரும் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் பவானியை வாழ்த்தியுள்ளனர்.

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்தில், ரங்கராஜ் பாண்டே, யோகி பாபு மற்றும் சமுத்திரகனி ஆகியோர் துணை வேடங்களில் நடிக்கின்றனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com