முகப்புகோலிவுட்

'அது புரியவே 20 வருஷம் ஆச்சு..?' - கிரிக்கெட் வீரர் அஷ்வினுடன் உரையாடிய நடிகர் மாதவன்

  | May 22, 2020 12:42 IST
Ashwin

துனுக்குகள்

 • மணிரத்னம் இயகத்தில் 2000-ல் வெளியான ‘ அலைபாயுதே' திரைப்படத்தின்
 • இந்த ஊரடங்கு காலத்தில் பல நடிகர் நடிகைகளும் பிற துறை பிரபலங்களும்
 • பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் தனது youtube தளத்தின்
மணிரத்னம் இயகத்தில் 2000-ல் வெளியான ‘ அலைபாயுதே' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் மாதவன். முன்னதாக 'இருவர்' படத்திற்காக மாதவனை ஆடிஷன் செய்ய அழைத்த மணிரத்தினம், உனது கண்கள் இளமையாக இருக்கின்றது இந்த வேடத்திற்கு நீ பொருத்தமாட்டாய் என்று கூறி அனுப்பினார். 

அதன் பிறகு மூன்று ஆண்டுகள் கழித்து மீண்டும் அவர் மாதவனை அழைத்தார், அலைபாயுதே என்ற படத்தில் நடிக்க வைத்தார். ஏப்ரல் 14-ஆம் தேதி 2000ம் ஆண்டு அந்த படம் வெளியானது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 14 2020ம் ஆண்டுடன் அலைபாயுதே வெளியாகி 20 ஆண்டுகளை நிறைவுசெய்தது. 20-ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த காதல் திரைப்படங்களில் ஒன்றான இந்த சூப்பர்ஹிட் படத்தை ரசிகர்கள் கடந்த ஏப்ரல் 14 அன்று சமூக வலைதளங்களில் கொண்டாடித் தீர்த்தனர்.

இந்நிலையில் இந்த ஊரடங்கு காலத்தில் பல நடிகர் நடிகைகளும் பிற துறை பிரபலங்களும் தங்களது நேரத்தை சமூக வலைத்தளங்களில் செலவிடுகின்றனர். இந்நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் தனது youtube தளத்தின் வாயிலாக அனைத்து துறை கலைகர்களுடனும் உரையாடி வருகின்றார். தற்போது நேற்று அவர் நடிகர் மாதவனுடன் தனது youtube வழியாக உரையாடிய அந்த காணொளியை தற்போது மாதவன் தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com