முகப்புகோலிவுட்

"அன்பான விக்கிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்" - விக்கிக்கு வாழ்த்துச்சொல்லும் நயன்..!

  | September 18, 2020 13:31 IST
Hbd Vignesh Shivan

துனுக்குகள்

 • இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ்
 • தற்போது ஓணம் பண்டிகையை கேரளாவின் முடித்துவிட்டு கோவாவில் தனது
 • பிறந்தநாளை கொண்டாடும் விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்
நானும் ரௌடி தான் படத்தில் இணைந்து பணியாற்றியதிலிருந்து, நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் மிகவும் நெருக்கமாக பழகிவருகின்றனர். இருவரும் காதலிப்பதாக வெளிப்படையாக தெரிவிக்கவில்லை என்றாலும், அதனை உறுதி செய்யும் விதமாக, வெளிநாடு, கோவில், சுற்றுளா, விருது விழா என எங்கு சென்றாலும் இருவரும் ஜோடியாகவே செல்வது மற்றும் மிக நெருக்கமான புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். 

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்றுக்கான அறிகுறி இருப்பதாகவும் ஆதலால் அவர்கள் தனிமையில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் தனது ட்வீட் மூலம் அதற்கு அப்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார் விக்னேஷ் சிவன் மற்றும் நயன். அவர்கள் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் "எங்களுக்கு கொரோனா இருக்கிறது என்று கூறி வெளியாகும் செய்திகளை கண்டு நகைப்பாக உள்ளது. நாங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும் நலமுடன் இருக்கிறோம் என்று அவர் அந்த பதிவில் கூறியுள்ளார். தற்போது ஓணம் பண்டிகையை கேரளாவின் முடித்துவிட்டு கோவாவில் தனது அன்னையின் பிறந்தநாளை அண்மையில் கொண்டாடினார் நயன்தாரா அவர்கள். இந்நிலையில் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் நயன்தாரா. அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் "அன்பான விக்கிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com