முகப்புகோலிவுட்

"நீயின்றி என் நாட்கள் எண்களாகும்" - மனைவிக்கு வாழ்த்து சொல்லும் இயக்குநர் நவீன்..!!

  | July 16, 2020 11:11 IST
Naveen

துனுக்குகள்

 • மூடர் கூடம் என்ற படத்தின் மூலம் 2013ம் ஆண்டு தமிழ் திரையுலகில்
 • தனது முதல் படத்திற்கு பிறகு சினிமாவிற்கு சற்று இடைவெளி கொடுத்த நவீன்
 • இந்நிலையில் இன்று தனது திருமணநாளை கொண்டாடும் அவர் தனது மனைவிக்கு
மூடர் கூடம் என்ற படத்தின் மூலம் 2013ம் ஆண்டு தமிழ் திரையுலகில் நடிகராகவும் இயக்குநராகவும் அறிமுகமானவர் தான் இயக்குநர் நவீன். பல இயக்குநர்களுக்கு தங்களுடைய முதல் படத்தில் கிடைக்காத அங்கீகாரம் இவருக்கும் கிடைத்தது. சிறந்த இயக்கம் மற்றும் நடிப்பால் முதல் படத்திலேயே மக்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றார். இந்த படத்தில் சிறந்த வசனங்கள் எழுதியதற்காக இவருக்கு விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. 

தனது முதல் படத்திற்கு பிறகு சினிமாவிற்கு சற்று இடைவெளி கொடுத்த நவீன், மீண்டும் சமுத்திரக்கனி நடிப்பில் 2019ம் ஆண்டு வெளியான கொளஞ்சி என்ற படத்தின் மூலம் ஒரு தயாரிப்பாளராக அறிமுகமாகி வெற்றி கண்டார். தற்போது அருண் விஜய், விஜய் அண்டோனி மற்றும் அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட நடிகர்களை கொண்டு 'அக்கினி சிறகுகள்' என்ற படத்தை உருவாக்கி வருகின்றார். 

இந்நிலையில் இன்று தனது திருமணநாளை கொண்டாடும் அவர் தனது மனைவிக்கு தனது வாழ்த்துக்களை கவிதை வடிவில் சமர்ப்பித்துள்ளார். அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் "நீயின்றி என் நாட்கள் எண்களாகும் நீதானே என் உயிர் சுமக்கும் தேகம் உன் பாதையில் என் ஆயுள்ரேகை போகும் நீ சிரிக்கவே நான் பிறக்கிறேன் Oh Farzana!" என்று குறிப்பிட்டுள்ளார்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com