முகப்புகோலிவுட்

'பிறந்தநாள் வாழ்த்துக்கள் பஜ்ஜி' - நாயகன் பிறந்தநாளில் வெளியாகும் 'Friendship' அப்டேட்..!!

  | July 03, 2020 09:00 IST
Hbd Harbhajan Singh

துனுக்குகள்

 • பல துறையை சேர்ந்த பிரபலங்கள் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளனர்
 • Friendship என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம்
 • ஹர்பஜன் சிங் அவர்களுக்கு பரிசாக இந்த படம் குறித்த ஒரு தகவல் இன்று
பல துறையை சேர்ந்த பிரபலங்கள் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பஜ்ஜி என்று அனைவரும் செல்லமாக அழைக்கும் ஹர்பஜன் சிங் அவர்களும் தற்போது திரையுலகில் ஹீரோவாக களமிறங்கி உள்ளார். 

Friendship என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கி தயாரிக்கின்றனர் இந்த படத்தில் ஹர்பஜன் சிங்க்கிற்கு ஜோடியாக பிக் பாஸ் புகழ் லாஸ்லியா கதாநாயகியாக நடிக்கின்றார். மேலும் இந்த படத்தில் நகைச்சுவை நடிகர் சதிஷ் இணைந்துள்ளார். மேலும் படத்தின் கூடுதல் பலமாகப் பிரபல நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

கொரோனா காரணமாக தடைபட்ட பல படங்களில் இதுவும் ஒன்று என்ற நிலையில் சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் First லுக் மோஷன் போஸ்டர் வெளியானது. இந்நிலையில் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் ஹர்பஜன் சிங் அவர்களுக்கு பரிசாக இந்த படம் குறித்த ஒரு தகவல் இன்று வெளியாக உள்ளது என்று படக்குழு அறிவித்துள்ளது.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com