முகப்புகோலிவுட்

'பிறந்தநாள் வாழ்த்துக்கள் கேப்டன் கூல்' - சூப்பர் ஸ்டார் பாணியில் அனிரூத் வெளியிட்ட மாஸ் வீடியோ..!!

  | July 07, 2020 08:33 IST
Hbd Captain Cool

துனுக்குகள்

  • இந்திய கிரிக்கெட் அணியின் முன்னால் கேப்டனும் நட்சத்திர பேட்ஸ்மேனுமாகிய
  • தனது 39வது அகவையில் அடியெடுத்து வைக்கும் தோனிக்கு
  • சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த பாணியில் உருவான வீடியோவை தோனிக்கு பிறந்தநாள்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னால் கேப்டனும் நட்சத்திர பேட்ஸ்மேனுமாகிய தோனி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடருக்கு பின்னர் இதுவரை வேறு எந்த போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்களாக வெளிவந்துக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் தோனியின் வாழ்க்கை வரலாறும் திரைப்படமாக எடுக்கப்பட்டு அப்படம் மாபெறும் வெற்றிப்படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று தனது 39வது அகவையில் அடியெடுத்து வைக்கும் தோனிக்கு பல நாட்களுக்கு முன்பிலிருந்தே வாழ்த்துக்களும் பாராட்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளது. கடந்த ஒரு வாரமாக அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு பல அசத்தல் வீடியோக்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த பாணியில் உருவான வீடியோவை தோனிக்கு பிறந்தநாள் பரிசாக கொடுத்துள்ளார் பிரபல இசையமைப்பாளர் அனிரூத் அவர்கள். மேலும் தோனியின் சக நண்பரான சுரேஷ் ரெய்னா அவர் வெறித்தனமாக துப்பாக்கி சுடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு அசத்தியுள்ளார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com