முகப்புகோலிவுட்

“பயங்கரம்” ஹேப்பி பர்த் டே அனிருத்! #HBDAnirudh

  | October 17, 2019 14:50 IST
Anirudh

துனுக்குகள்

 • இந்த ஆண்டு இரண்டு முறை ரஜினியின் படத்திற்கு இசை அமைத்திருக்கிறார்
 • இன்று பிறந்த நாள் காணும் அனிருதிற்கு பிரலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்
 • கமலின் இந்தியன் 2 படத்திற்கு இசை அமைத்து வருகிறர் அனிருத்
கடந்த 2011ம் ஆண்டு பெருவாரியான இசை பிரியர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பிய ஒரு இளைஞன். முன்னணி இசை அமைப்பாளர்கள் கோலோச்சிய அன்றைய காலகட்டத்தில் தன் முதல் அடியை மிக கவனமாகவும் நேர்த்தியாகவும் வைத்து தமிழ் சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த வெடல பையன்.
தனுஷ் நடிப்பில் வெளியான ‘3' படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமான அந்த வெடல பையனின் விரலில் இருந்து வந்த வித்தைகள் ஏராளம்.

காதல், சோகம், மகிழ்ச்சி ஆகிய உணர்வுகளை தன் விரலின் வித்தையில் பின்னணி இசையில் நமக்குள் கடத்திய வித்தைக்காரன். அவன் நினைத்திருக்கமாட்டான் இத்தனை லட்சம் இளைஞர்கள் தங்களது இதயத்தில் இத்தனை பெரிய சிம்மாசனத்தை வழங்குவார் என்று. ஆனால் அதுதான் நடந்தது. அவன் பெயர் அனிருத் ரவிசந்திரன். சமகால இளைஞர்களின் சகோ. சென்னை பட்டனத்தின் செல்ல பிள்ளை.
 
இன்று இவன் இசையை கேட்காத இளைஞர்கள் இல்லை. கொண்டாடாத ரசிகர்கள் இல்லை. தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்தி இசையுலகில் தனக்கென தனி முத்திரையை பதித்துள்ளார் அனிருத்.

முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வணக்கம் சென்னை, இரண்டாம் உலகம், வேலையில்லா பட்டதாரி, மான் கராத்தே, என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கு அனிருத் இசை பலம் சேர்த்தது. அனிருத்தின் பின்னணி இசைக்கு இங்கு பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. குறிப்பாக தீம் மியூசிக்.
ஒவ்வொரு கதாநாயகனுக்கும் ஏற்றவாறு இவர் அமைத்துக்கொடுக்கும் தீம் மிசிக் இன்று பலரின் ரிங் டோன் என்றால் அது மிகையல்ல. மிகக்குறுகிய காலத்தில் தமிழ்சினிமாவில் தன் இசை பயணத்தை தொடங்கிய அனிருத், பெரும் வெற்றிகளையும், பாராட்டுகளையும் பெற்று தன் பயணத்தை தொடர்ந்துக்கொண்டிருக்கிறார். இவரது இசை இன்றைய தலைமுறையினரிடையே பயங்கரம் என்றுதான் கூறவேண்டும். அவரது பயணங்கள் அனைத்தும் வெற்றி பெற இந்த இனிய நாளில் வாழ்த்துவோம் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அனிருத். #HBDAnirudh
 
 
 
 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com