முகப்புகோலிவுட்

'இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்' - 'கவிப்பேரரசு' குறித்த சில சுவாரசிய தகவல்கள்..!!

  | July 13, 2020 08:08 IST
Hbd Vairamuthu

துனுக்குகள்

 • வைரமுத்து என்ற அந்த மாமனிதன் குறித்த சில சுவாரசிய தகவல்கள் இதோ..
 • வைரமுத்துவின் படைப்புகளில் “கள்ளிக்காட்டு இதிகாசம்”, “கருவாச்சி காவியம்”
 • "இதுவரை நான்" எனும் பெயரில் 28 வயதில் சுயசரிதை எழுதியர் இவரே
பாரதிராஜா என்ற ஒப்பற்ற இயக்குநரால் 1980ம் ஆண்டு வெளியான "நிழல்கள்" என்ற திரைப்படத்தில் வெளியான "ஒரு பொன்மலைப் பொழுது" என்ற பாடலின் மூலம் திரையுலக பிரவேசம் அடைந்தார் ஒரு இணையற்ற கவிஞர். 13 ஜூலை 1953ம் ஆண்டு மதுரையில் பிறந்த சிங்கம் அது. கடந்த 40 ஆண்டுகளாக 7500 பாடல்களை கடந்து வற்றாத ஊற்றாக ஓடும் அந்த மாமேதையின் 66வது பிறந்தநாள் இன்று. கவிப்பேரரசு வைரமுத்து என்ற அந்த மாமனிதன் குறித்த சில சுவாரசிய தகவல்கள் இதோ..

இதுவரை 7500 பாடல்களுக்கு மேல் எழுதியிருக்கிறார் கவிஞர் வைரமுத்து. ஒவ்வொரு பத்தாவது நிமிடத்திலும் இவரது பாடல் ஒன்று உலகவானொலியில் ஒலிப்பரப்பாகின்றது அல்லது உலகத் தமிழ்த் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகின்றது. பாட்ஷா படத்தில் இடம்பெற்ற ‘எட்டு எட்டா மனுஷ வாழ்வப் பிரிச்சுக்க' என்ற பாடல் கவிஞரால் 8 நிமிடத்தில் எழுதப்பட்டதாகும். மிகக் குறைந்த நேரத்தில் எழுதப்பட்ட பாடல் இது. இவர் எழுதிய பாடலில் அதிக நேரம் எடுத்துக்கொண்ட பாடல் ‘வீரபாண்டிக் கோட்டையிலே வெள்ளி முளைக்கும் வேளையிலே'. என்பதே.

அமெரிக்காவில் ஐ.நா சபையில் நடந்த இந்தியாவின் 70 ஆவது சுதந்திரதின விழா இசை நிகழ்ச்சியில் கவிஞரின் "வெள்ளைப் பூக்கள் உலகமெங்கும் மலர்கவே" பாடலை  முதல் பாடலாக பாடித் தொடங்கிவைத்தார் ஏ.ஆர்.ரகுமான். 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.நா சபையில் நடந்த இந்திய நிகழ்ச்சியில் பாடப்பெற்ற முதல் தமிழ்ப்பாடல் கவிஞரின் பாடலாகும்.       
கவிஞர் வைரமுத்துவின் படைப்புகளில் “கள்ளிக்காட்டு இதிகாசம்”, “கருவாச்சி காவியம்” ஆகியவை இரட்டைக் காப்பியங்களாகப் போற்றப்படுகின்றன. சாகித்ய அகாடமி விருது பெற்ற இவரது கள்ளிக்காட்டு இதிகாசம் நாவல் 23 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கிறது. அண்மையில் இந்தியில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியான ‘கள்ளிக்காட்டு இதிகாசம்' நாட்டின் சிறந்த புத்தகத்துக்கான ‘ஃபிக்கி (FICCI)' விருதுக்குத்தேர்வு பெற்றுள்ளது.

"இதுவரை நான்" எனும் பெயரில் 28 வயதில் சுயசரிதை எழுதியர் இவரே. இவரது சுயசரிதையான ‘இதுவரைநான்' மும்பை இந்தியன் தியேட்டர் சென்டரால் நாடகமாகவும் அரங்கேற்றப்பட்டது. 11.    கவிஞர் வைரமுத்துவின் பல கவிதைகள் தமிழ்நாட்டுப் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பாடங்களாகத் திகழ்கின்றன. வைரமுத்து எழுதிய ‘சின்னச் சின்ன ஆசை' பாடல் எங்கள் மலையாள மண்ணில் இன்னும் ஒரு தாலாட்டாகவே ஒலித்துக்கொண்டிருக்கிறது. ‘வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை' என்ற வரி கற்பனையின் உச்சமாகும் என்று ஞானபீட விருது பெற்ற மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் பாராட்டியிருக்கிறார்.

இந்தியாவின் சிறந்த பாடலாசிரியருக்கான தேசியவிருதை  7 முறை பெற்ற இந்தியாவின் ஒரே பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து. தமிழ்நாடு அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதினையும் கவிப்பேரரசு வைரமுத்து 6 முறை பெற்றிருக்கிறார். அமெரிக் கன்லைப்ரரி ஆப் காங்கிரஸ் கவிஞர் வைரமுத்துவின் கவிதைகளை அவரது குரலில் பதிவு செய்து ஆவணப்படுத்தியுள்ளது.


 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com