முகப்புகோலிவுட்

'இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்' - பிரபலங்களின் வாழ்த்து மழையில் ஹரிஷ் கல்யாண்..!!

  | June 29, 2020 19:21 IST
Harish Kalyan

துனுக்குகள்

 • "பியார் பிரேமா காதல்" திரைப்படம் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமானவர்
 • இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் அவருக்கு
 • தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
"பியார் பிரேமா காதல்" திரைப்படம் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமானவர் ஹரிஸ் கல்யாண். இப்படத்தைத் தொடர்ந்து ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் வெளியான "இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்" படத்தில் நடித்தார். இவ்விரண்டு படங்களும் பெரிய அளவில் கவனம் பெறவில்லை என்றாலும் தனக்கான இடத்தை ஒரு கலைஞனாக தக்க வைத்துக்கொண்டார் இவர். 

இந்நிலையில் தனுசு ராசி நேயர்களே படத்திற்கு பிறகு ஹரிஷ் ‘கசட தபற' திரைப்படத்தில் நடித்துவருகிறார். அதைத் தொடர்ந்து ‘பெல்லி சூப்புலே' எனும் தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக் படத்திலும் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமானார். ஹரிஷ் கல்யாணுக்கு அண்மையில் வெளியான தாராள பிரபு திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்று தந்துள்ளது. 

தற்போது இந்த ஊரடங்கு காலத்தில் தனது வீட்டில் நேரத்தை செலவிட்டு வரும் ஹரிஷ் கல்யாண் தனது இன்ஸ்டா பக்கத்தில் படு ஆக்டிவாக உள்ளனர். இந்நிலையில் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் அவருக்கு திரைபிரபலன்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com