முகப்புகோலிவுட்

"இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்" - பிரபலங்கள் வாழ்த்து மழையில் DSP..!

  | August 02, 2020 07:38 IST
Hbddsp

துனுக்குகள்

 • தெலுங்கில் 1999ம் ஆண்டு வெளியான 'தேவி' என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக
 • இவர் தெலுங்கு திரையுலகிற்கு மட்டும் இல்லாமல் தமிழ் திரையுலகிற்கும்
 • தனி சாம்ராஜ்யம் அமைத்து வலம்வரும் இவர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி
தெலுங்கில் 1999ம் ஆண்டு வெளியான 'தேவி' என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தான் தேவி ஸ்ரீ பிரசாத். ரசிகர்களும் சகாக்களும் இவரை DSP என்று செல்லமாக அழைப்பதும் உண்டு. தனது தனித்துவமான திறமையால் இசை சாம்ராஜ்யத்தில் வெகுசீக்கிரத்தில் இவர் சூப்பர் ஸ்டாராக மாறினார். இந்த 20 ஆண்டு பயணத்தில் 80-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார். தெலுங்கில் பல வெற்றி படங்களில் இசையமைத்துள்ளார் இவர், தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் 'புஷ்பா' படத்திற்க்கு இசையமைத்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தெலுங்கு திரையுலகிற்கு மட்டும் இல்லாமல் தமிழ் திரையுலகிற்கும் செல்லப்பிள்ளை, 2001ம் ஆண்டு அப்போதைய இளைய தளபதியும் இன்றைய தளபதியுமான விஜய் நடிப்பில் வெளியான 'பத்ரி' படத்திற்கு பின்னணி இசை அமைத்தது இவர் தான். அந்த படத்தின் மூலம் தான் இவர் தமிழில் அறிமுகமானார். சச்சின், கந்தசாமி, சிங்கம், வீரம் போன்ற பல படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாடலாசிரியராக, பாடகராக மற்றும் இசையமைப்பாளராக தனக்கென தனி சாம்ராஜ்யம் அமைத்து வலம்வரும் இவர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார். திரைபிரபலன்கள் பலரும் இவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com