முகப்புகோலிவுட்

திரையுலக நாயகி த்ரிஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்…!

  | May 04, 2019 16:35 IST
Trisha

துனுக்குகள்

  • த்ரிஷாவுக்கு இன்று பிறந்த நாள்
  • பேட்ட படத்தில் இவர் நடித்திருந்தார்
  • திரையுலக பிரபலங்கள் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
மே மாதம் 4-ம் தேதி 1983-ம் ஆண்டு சென்னையில் பிறந்தவர்  நடிகை த்ரிஷா கிருஷ்ணன்.
 
சென்னை அழகியாக  1999-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார் த்ரிஷா. அதன் பின்தான் இவர் திரைப்படங்களில் கவனம் செலுத்தினார்.

தமிழில்  1999-ம் ஆண்டு வெளியான ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக  துணை நடிகையாக அறிமுகமானார்.
தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக  வலம் வருகிறார்.
 
இவருக்கு காதல் திரைப்படங்கள் பெரும் அளவில் நல்ல வரவேற்பை பெற்றுதந்துள்ளது.
சாமி, கில்லி போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம்  தமிழ் திரையுலக ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார் த்ரிஷா.
 
அதனை தொடர்ந்து 2002-ம் ஆண்டு வெளியான மௌனம் பேசியதே படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினை பெற்றார் நடிகை த்ரிஷா.
 
அதனை தொடர்ந்து 2003-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான வர்ஷம் என்ற தெலுங்கு படத்தில் நடித்ததற்காக சிறந்த தெலுங்கு திரைப்பட நடிகைக்கான விருது, பெற்றார்
 
2004-ம் ஆண்டு கில்லி, ஆயுத எழுத்து, திருப்பாச்சி என அடுத்தடுத்து வெற்றி படங்கள் தமிழ் திரையுலகில் அவருக்கு திருப்பு முனையாக அமைந்தது.
 
2008-ம் ஆண்டு வெளியான அபியும் நானும் என்ற படத்தில் பிரகாஷ் ராஜ்-க்கு மகளாக நடித்தான் இந்த படத்திற்காக. சமீபத்தில் நடிகை த்ரிஷா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96' படம் சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. ரஜினியுடன் பேட்ட படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
 
இதனைத் தொடர்ந்து `சதுரங்கவேட்டை 2', `கர்ஜனை' உள்ளிட்ட படங்கள் வெளியாக இருக்கின்றன. திரிஷா தற்போது `1818', `பரமபதம் விளையாட்டு', ராங்கி, சிம்ரனுடன் ஆக்ஷன் படம் என பிசியாக இருக்கிறார்.
 
இன்று பிறந்த நாள் கானும் த்ரிஷாவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள் நாமும் வாழ்த்துவோம்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்