முகப்புகோலிவுட்

மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த மகாக்கலைஞனுக்கு பிறந்த நாள் வாழ்த்து ! HBDVIKRAM

  | April 17, 2019 15:53 IST
Vikram

துனுக்குகள்

  • கவுதம் வாசுதேவன் இயக்கத்தில் இவர் நடித்துள்ள படம் துருவ நட்சத்திரம்
  • இன்று பிறந்தநாள் காணும் விக்ரமிற்கு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்
  • அடுத்து மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்கிறார் இவர்
சிறந்த கலைஞர், நல்ல பண்பாளர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விக்ரம் என்கிற திரையுலக கலைஞனுக்கு இன்று பிறந்தநாள்.
 
5288qkho

திரையுலகமே வாழ்த்து சொல்லும் அளவிற்கு தன்னுடைய கலைத்திறமையால் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த மகாக்கலைஞன்.

 
ko0aags8


1990ம் ஆண்டு வெளியான “ என் காதல் கண்மணி' என்கிற படத்தின் மூலம் அறிமுகமானார் இவர். அடுத்தடுத்து    ஒரு சில படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்தினார்.
 
g6ps4khg

புதிய மன்னர்கள் படத்தில் புரட்சிகர இளைஞராக நடித்து கல்லூரி மாணவர்களின் கவனத்தை ஈர்த்தார். விமர்சன ரீதியாக இந்த படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. 
 
8pn74vd

திரையுலகிற்கு வந்து 9 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குநர் பாலா இயக்கத்தில் 1999ம் ஆண்டு வெளியான சேது திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பால் அனைத்து மக்களின் கவனத்தையும் ஈர்த்தார். வளர்ந்து வரும் எந்த நடிகரும் ஏற்று நடிக்க யோசிக்கும் கதாபாத்திரங்களை சவாலாக ஏற்று நடித்திருந்தார்.  சேது திரைப்படம் விக்ரமிற்கு திருப்புமுனையாக அமைந்த படம் என்று சொல்லலாம்.
 
iugj6blo

தேவையானியுடன் ஜோடி சேர்ந்து இவர் நடிப்பில் வெளியான வின்னுக்கும் மன்னும் திரைப்படம் குடும்பங்கள் ரசித்து லயிக்கு திரைப்படமாக அமைந்தது. இந்த படத்தில் சரத்குமார் விக்ரமுக்கு தந்தையாக நடித்திருந்தார். 
 
eih7aa2

இந்த வெற்றிப்படத்தை தொடர்ந்து தில், ஜெமினி, தூள், சாமி உள்ளிட்ட படங்கள் இவருக்கு வெற்றி படங்களாக அமைந்தது.
 
9dcegkro

இயக்குநர் வினயன் இயக்கத்தில் 2001ம் ஆண்டு வெளியான காசி படத்தில் சவாலான கதாபாத்திரத்தில் நடித்து மீண்டும் தமிழ் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார்.
 
 
jcvca3ro

பிதாமகன் படத்தில் வெட்டியான் வேடத்தில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பில் இந்திய அளவில் புகழ் பெற்றார். இந்த படத்திற்காக தேசிய விருதும் பெற்றார்.
 
 
f15mvjv
 
oltmsdpo

அதிகப்பொருட்செலவில் எடுக்கப்பட்ட அந்நியன் திரைப்படம் இவருக்கு அடுத்த திருப்பு முனையாக அமைந்தது. அடுத்தடுத்து பீமா, இராவணன், கந்தசாமி,  தெய்வத்திருமகள், சங்கர் இயக்கத்தில் ஐ என அடுக்கடுக்கான படங்களில் நடித்து லயிக்க வைத்தார்.
 
5cl61vdg

எளிமையான தோற்றம் பிரம்மாண்ட நடிப்பு, தமிழ் சினிமாவில் விக்ரம் படம் என்றால் அதற்கு தனி எதிர்பார்க்க உண்டு என்கிற மனநிலையை ரசிகர்கள் மனதில் பதிய வைத்தவர்.
 
79ekkdgo

தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்குஇ மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வரவேற்பை பெற்றார்.
 
u6gdfd0g

7பிலிம்போர் விருதுகளும், சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் பெற்ற பெருமைக்குறியவர்.
 
 
8kmhu6bo

இவரை கௌரவிக்கும் விதமாக மிலான் பல்கலைக்கழகம் 2011ம் ஆண்டு மே மாதம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.
 
v67f0cvo

இவர் தற்போது கவுதம் வாசுதேவன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. 
 
ibdu00ao

நீணட கால பயணம், போராட்டம் நிறைந்த இந்த துறையில் எப்போது இந்த கலைஞனுக்கு தனி இடம் உண்டு. ஆகச்சிறந்த கலை திறமையால் ரசிகர்களை ஆட்கொண்டுள்ள இந்த மகாக்கலைஞனின் பயணம் தொடர  வாழ்த்துவோம்.
 
 
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்