முகப்புகோலிவுட்

"ரஜினியை பார்த்து சினிமா கத்துகிட்ட பையன்" - பிரபல இயக்குநரை பாராட்டிய மில்டன்..!

  | August 06, 2020 07:36 IST
Vijay Milton

துனுக்குகள்

 • துல்கர் சல்மானின் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' திரைப்படம் கடந்த
 • அண்மையில் இந்த படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தேசிங்கு
 • இந்நிலையில் இதை குறிப்பிட்டுள்ள பிரபல ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன்
துல்கர் சல்மானின் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' திரைப்படம் கடந்த பிப்ரவரியில் வெளியானது. இப்படம் விமர்சகர்களிடமிருந்தும் பார்வையாளர்களிடமிருந்தும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது, நல்ல வசூலையும் ஈட்டிவந்தது. துல்கர் சல்மான் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நேரடி தமிழ் படமாக இப்படத்தில் நடித்தார். குறிப்பாக இந்த படத்தின் மூலம் இயக்குநராக களமிறங்கியுள்ள தேசிங்கு பெரியசாமிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இயக்குநர் தேசிங்கு அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்பதை KKK படத்தின் முதல் காட்சியிலேயே நிரூபித்திருப்பர். 

அண்மையில் இந்த படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தேசிங்கு பெரியசாமியை தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். சூப்பர்... excellent.. பெரிய future இருக்கு உங்களுக்கு என்று கூறிய சூப்பர் ஸ்டார், மேலும் தனக்கு ஒரு கதை எழுதுங்கள் என்று அவரிடம் கூறியது தேசிங்கு அவர்களை மகிழ்ச்சியின் உச்சிக்கே கொண்டுசென்றது. இந்த ஆடியோ இணையத்தில் லீக்கனதை அடுத்து, சமூக வலைத்தளங்களில் காட்டுத் தீ போல் பரவியது.

இந்நிலையில் இதை குறிப்பிட்டுள்ள பிரபல ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன்  வெளியிட்ட ட்விட்டர் பதிவில் "tv ல Rajinikanth படம் பாத்து cinema கத்துக்கிட்ட பையனுக்கு அந்த Superstar phone பண்ணி எனக்கு கதை think பண்ணுங்கனு சொன்னா அது எவ்ளோ பெரிய moment. wow.  happy for u guyz.." என்று கூறி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com