முகப்புகோலிவுட்

'பிறந்தநாள் வாழ்த்துக்கள் மாம்சே' - இயக்குநர் திரு-வை வாழ்த்தும் விஜயலக்ஷ்மி..!!

  | July 06, 2020 11:19 IST
Vijayalakshmi

துனுக்குகள்

 • 2010ம் ஆண்டு வெளியான விஷாலின் தீராத விளையாட்டு பிள்ளை என்ற படத்தின் மூலம்
 • பிரபல நடிகர் கார்த்திக் அவரது மகன் கௌதமுடன் இணைந்து நடித்த
 • தனது பிறந்தநாளை கொண்டாடும் இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து
2010ம் ஆண்டு வெளியான விஷாலின் தீராத விளையாட்டு பிள்ளை என்ற படத்தின் மூலம் திரையுலகில் இயக்குநராக கால்பதித்தவர் தான் இயக்குநர் 'திரு'. இதுவரை ஐந்து படங்களே மட்டுமே இயக்கியுள்ளபோதும் திரையுலகிலும் மக்களிடையேயும் இவர் பிரபலம். விஷாலின் சமர் மற்றும் நான் சிகப்பு மனிதன் ஆகிய படங்களை இயக்கியதும் இவர் தான். 

2018ம் ஆண்டு பிரபல நடிகர் கார்த்திக் அவரது மகன் கௌதமுடன் இணைந்து நடித்த மிஸ்டர். சந்திரமௌலி படத்தை இயக்கியதும் இவர் தான். அதன் பிறகு தெலுங்கில் பிரபல நடிகர் கோபிசந்த் நடிப்பில் வெளியான சாணக்யா படத்தை இயக்கினார்.

இந்நிலையில் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதே போல பிரபல நடிகையும் திரு அவர்களின் மனைவியின் சகோதரியுமான விஜயலக்ஷ்மி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com