முகப்புகோலிவுட்

'இனிதே நடந்தது நித்தின் திருமணம்' - கல்யாணபரிசு கொடுத்த RangDe படக்குழ..!!

  | July 27, 2020 11:50 IST
Nithiin Weds Shalini

துனுக்குகள்

 • இளம் டோலிவுட் ஹீரோ நித்தின் கடந்த 22ம் தேதி காலை அவரது
 • இந்நிலையில் தற்போது நித்தின் அவர்கள் கீர்த்தி சுரேஷ் அவர்களுடன்
 • திரைப்பட குழுவினர் அவருக்கு திருமண பரிசு ஒன்றை தர முடிவு செய்தனர்
இளம் டோலிவுட் ஹீரோ நித்தின் கடந்த 22ம் தேதி காலை 8 ஆண்டு கால காதலி ஷாலினியுடன் ஹைதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். கடந்த ஏப்ரல் மாதமே திட்டமிடப்பட்ட இந்த திருமணம் கொரோனா வைரஸ் தொற்று மற்றும் லாக் டவுன் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த சனிக்கிழமை அன்று நித்தினும் அவரது காதலி ஷாலினியும் அறிவித்தது போலவே கடந்த ஜூலை 26ம் தேதி இரவு 8.30 மணிக்கு (நேற்று) ஹைதராபாத்தில் திருமணம் செய்துகொண்டனர். 

இந்நிலையில் தற்போது நித்தின் அவர்கள் கீர்த்தி சுரேஷ் அவர்களுடன் நடித்து வெளியாக இருக்கும் 'RangDe' திரைப்பட குழுவினர் அவருக்கு திருமண பரிசு ஒன்றை தர முடிவு செய்தனர். நேற்று மாலை அந்த பரிசை வெளியிட்டனர். RangDe படத்தின் ட்ரைலரை தான் படக்குழு அவருக்கு பரிசாக அளித்தது. 
 
நித்தின் தனது காதலி ஷாலினியை 8 ஆண்டுகள் காதலித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது திருமண புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றிய அவர் அனைவருடைய வாழ்த்துக்களும் தனக்கு தேவை என்று குறிப்பிட்டிருந்தார். நித்தின் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் RangDe திரைப்படம் லாக் டவுன் முடிந்தவடன் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com