முகப்புகோலிவுட்

'தாய்மையே சிறந்தது..!!' - 'கையில் குழந்தையுடன் வாழ்த்து சொன்ன நயன்தாரா..'

  | May 11, 2020 10:20 IST
Nayanathara

துனுக்குகள்

 • பல ஆண்டு போராட்டத்திற்கு பிறகு லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை
 • இந்நிலையில் நேற்று அன்னையர் தினத்தை முன்னிட்டு எதிர்கால
 • அந்த பதிவில் கையில் அழகான ஒரு குழந்தையுடன் அவர் இருக்கும்
பல ஆண்டு போராட்டத்திற்கு பிறகு லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்றவர் தான் நடிகை நயன்தாரா. நயன்தாரா தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் மிகுந்த காதலில் இருக்கிறார். இவர்கள் ‘நானும் ரவுடி தான்' படத் தயாரிப்பின் போது சந்தித்தனர். தற்போது இந்த ஜோடி கோலிவுட்டின் அசைக்கமுடியாத ஜோடியாக் உள்ளது. அவர்கள் எப்போதும் ஒன்றாக பிணைந்துள்ளனர் மற்றும் சமூக ஊடகங்களிலும் தவறாமல் ரசிகர்களுடன் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கின்றனர். சமீபத்தில், இவர்களுக்கு இடையில் பிரிவு ஏற்பட்டதாக வதந்திகள் பரவியது. ஆனால், அதை பொய்யாக்கும் விதமாக பல தருணங்களில் அவர்களின் சமூக வலைதள பதிவுகள் பதிலளித்தது.

இந்நிலையில் நேற்று அன்னையர் தினத்தை முன்னிட்டு எதிர்கால அன்னையர்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை ட்விட்டர் பக்கத்தின் மூலன் அறிவித்துள்ளார் நடிகை நயன்தாரா. அவர் வெளியிட ட்விட்டர் பதிவில், எதிர்கால தாய்மார்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை அவர் தெரிவித்துள்ளார். 

அந்த பதிவில் கையில் அழகான ஒரு குழந்தையுடன் அவர் இருக்கும் ஒரு புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். பெண்களுக்கு இருக்கும் பல கடமைகளில் தாயாக இருப்பதே சிறந்தது என்று அவர் தெரிவித்துள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com