முகப்புகோலிவுட்

'அசத்தும் அருண்ராஜா காமராஜ்' - வெளியானது இரண்டாவது ஆல்பத்தின் டைட்டில்..!

  | August 02, 2020 08:46 IST
Arunraja Kamaraj

துனுக்குகள்

 • பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களுடன் இணைந்து சின்னத்திரையில்
 • தற்போது, இந்த கொரோனா லாக்டவுனுக்கு இடையில், தன்னுடைய ARK Entertainments
 • இந்த ஆல்பம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களுடன் இணைந்து சின்னத்திரையில் கலக்கியவர் தான் தற்போது தமிழ் சினிமாவில் நடிகர், பாடலாசிரியர், பாடகர் என பன்முக திறமைக்கொண்டு விளங்கும் அருண்ராஜா காமராஜ். ‘ராஜா ராணி, மான் கராத்தே, மரகத நாணயம்' போன்ற வெற்றிப் படங்களில் நடித்திருந்த அருண்ராஜா, சூப்பர் ஸ்டாரின் ‘கபாலி' படத்தில் இடம்பெற்ற ‘நெருப்புடா' பாடலை எழுதி மற்றும் பாடி உலகளவில் பரிட்சயமானார். கடந்த 2018ம் ஆண்டு வெளியான, ‘கனா' படத்தின் மூலம் அருண்ராஜா காமராஜ் இயக்குநர் அவதாரம் எடுத்தார்.

தற்போது, இந்த கொரோனா லாக்டவுனுக்கு இடையில், தன்னுடைய ARK Entertainments என்ற யூடூபில் சேனல் வழியாக ஏற்கனவே 'கன்னக்குழி அழகே' என்ற இசை ஆல்பத்தை அவரே இயக்கி பாடல்வரிகளையும் எழுதி வெளியிட்டார். கணேசன் சேகர் இசை அமைக்க, பிரபல பாடகர் விஜய் யேசுதாஸ் பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் வைரல் ஹிட்டான நிலையில் தற்போது அடுத்த ஆல்பத்தில் களமிறங்கி உள்ளார். 

'Che' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆல்பம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அருண்ராஜா காமராஜ் அவர்கள் அவருடைய இந்த இரண்டாவது ஆல்பத்தின் டைட்டிலை வெளியிட்டுள்ளார்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com