முகப்புகோலிவுட்

"இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்" - பிரசன்னா சினேகா ஜோடியை வாழ்த்திய 'வால்டர்'

  | May 11, 2020 11:47 IST
Sibi Sathyaraj

துனுக்குகள்

 • தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதியான பிரசன்னா மற்றும் சினேகாவுக்கு
 • கடந்த ஜனவரி மாதம் 24-ஆம் தேதி, இந்த நட்சத்திர தம்பதிக்கு இரண்டாவது
 • நடிகர் சிபியுடன் இணைந்து பிரசன்னா நாணயம் என்ற படத்தில்
தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதியான பிரசன்னா மற்றும் சினேகாவுக்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் பெண் குழந்தை பிறந்தது. நடிகர்களான பிரசன்னா மற்றும் சினேகாவிற்கு 2012ம் ஆண்டு திருமணம் ஆனது. இந்த நட்சத்திர தம்பதிக்கு விஹான் எனும் மகன் உள்ளார். ஆரம்பத்தில் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துவந்த இருவரும் தற்போது, நல்ல நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து மிக குறைவான அளவிலேயே படங்களில் நடித்து வருகின்றனர்.

கடந்த ஜனவரி மாதம் 24-ஆம் தேதி, இந்த நட்சத்திர தம்பதிக்கு இரண்டாவது குழந்தையாக பெண்பிள்ளை பிறந்தது. அதனை, பிரசன்னாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் “தை மகள் பிறந்தாள்” என பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்நிலையில் இன்று தங்களது திருமண நாளை கொண்டாடும் அந்த தம்பதிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் நடிகர் சிபி சத்யராஜ். 

நடிகர் சிபியுடன் இணைந்து பிரசன்னா நாணயம் என்ற படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 2010ம் ஆண்டு வெளியான இந்த படம் இருவருக்கும் பெரிய அளவில் பெயரை பெற்றுத்தந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com