முகப்புகோலிவுட்

ஆர்யாவுக்கு ஜோடியான விஜய் சேதுபதி பட நாயகி

  | November 29, 2017 17:12 IST
Director Santhosh P Jayakumar

துனுக்குகள்

  • ‘ஹரஹர மஹாதேவகி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சந்தோஷ்
  • கெளதம் கார்த்திக் – சந்தோஷ் கூட்டணி அமைத்துள்ள 2-வது படம் ‘IAMK’
  • இதில் ஹீரோவாக நடிகர் ஆர்யா நடிக்கவுள்ளாராம்
நடிகர் கெளதம் கார்த்திக் நடித்து இவ்வருடம் (2017) வெளியான படம் ‘ஹரஹர மஹாதேவகி’. அறிமுக இயக்குநர் சந்தோஷ்.பி.ஜெயக்குமார் இயக்கியிருந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து மீண்டும் கெளதம் கார்த்திக் – சந்தோஷ்.பி.ஜெயக்குமார் கூட்டணி அமைத்துள்ள படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’.
 
BLUE GHOST’ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இதன் ஷூட்டிங் சமீபத்தில் துவங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, மற்றுமொரு புதிய படத்தை இயக்க சந்தோஷ்.பி.ஜெயக்குமார் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஹீரோவாக நடிகர் ஆர்யா நடிக்கவுள்ளாராம். ஆர்யாவுக்கு ஜோடியாக ‘வனமகன், ஜுங்கா’ புகழ் சாயீஷா டூயட் பாடி ஆடவுள்ளார். 'கஜினிகாந்த்' என டைட்டிலிட்டுள்ள இந்த படத்தை ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கவுள்ளார்.
 
இதை ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனமே தங்களது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளது. பால முரளி பாலு இசையமைக்கவுள்ள இதற்கு பிரசன்னா படத்தொகுப்பாளராக பணியாற்றவுள்ளார். படத்தின் பூஜை இன்று (நவம்பர் 29-ஆம் தேதி) சென்னையில் போடப்பட்டது. வெகு விரைவில் படத்தில் நடிக்கவிருக்கும் இதர நடிகர்களின் பட்டியல் மற்றும் ஷூட்டிங் ப்ளான் குறித்த அப்டேட்ஸ் டிவிட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.​
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்