முகப்புகோலிவுட்

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் பிரபல கிரிகெட் வீரர்!

  | September 10, 2019 18:45 IST
G.v Prakash

துனுக்குகள்

 • பெயரிடப்படாத இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகிறது
 • படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை கிரிகெட் வீரர் ஹர்பஜன் சிங்ங் வெளியிடுகிறா
 • சதீஷ் செல்வகுமார் இப்படத்தை இயக்க இருக்கிறார்
தமிழ் திரையுலகில் இசைஅமைப்பாளராக தடம் பதித்து தனக்கென தனிப்பாதை அமைத்தவர் ஜி.வி.பிரகாஷ். பாடகராகவும் அவ்வப்போது வந்து ஆச்சர்யபடுத்தும் ஆச்சர்யகாரர். நடிப்பிலும் சச்கைபோடு போட்டு வருகிறார். தனது இயல்பான நடிப்பில் எளிய மக்களின் பேராதவு பெற்ற நடிகராக தமிழ் சினிமாவை அலங்கரித்துக்கொண்டிருக்கும் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சிவப்பு மஞ்சல் பச்சை' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 
இப்படத்தை அடுத்து இயக்குநர் சதீஷ் செல்வகுமார் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.  பெயரிடப்படாத இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இந்திய கிரிகெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் நாளை மாலை வெளியிட இருக்கிறார். 
 
இது குறித்து ஜி.வி.பிரகாஷ்,
 
‘தமிழ் புலவர் பராக் பராக்
ட்விட்டர் உலக டான், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செல்ல பிள்ளை. ஹர்பஜன் சிங் எங்க படத்தோட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுது பெருமையாக இருக்கிறது' என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
 
 
 
 
 
 
 
 
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com