ஜீவா, தேவி, வனமகன், மாசு என்கிற மாசிலாமணி உள்ளிட்ட படங்களில் நடித்த சஞ்சய் பாரதி இயக்கத்தில், ஹரிஷ் கல்யான் நடிக்கும் திரைப்படம் ‘தனுசு ராசி நேயர்களே'. இப்படத்தில் திகங்கனா சூர்யவர்ஷி, ரெபா மோனிகா மற்றும் ரியா சக்ரவர்தி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும், முனிஷ்காந்த், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்திலிருந்து ‘ஐ வாண்ட் எ கேல்' எனும் சிங்கிள் ட்ராக் சமீபத்தில் வெளியாகி பிரபலமானது. அந்தப் பாடலை அனிருத் பாடினார்.
இந்நிலையில், இப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகியுள்ளது. இப்படம் முழுக்க முழுக்க இளைஞர்கள் விரும்பத்தக்கதாக இருக்கும் என்பது இந்த டீசரின் மூலம் தெரிகிறது. தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் இந்த டீசர், இப்படத்தின் வருகைக்காக இளைஞர்களை பெரிதும் எதிர்பார்க்க வைத்துள்ளது.
நடிகர் ஆர்யா இந்த டீசரை பார்த்துவிட்டு, முதல் முதலாக இயக்குனராகும் சஞ்சய் பாரதிக்கும், மற்ற படக்குழுவினருக்கும் தனது வாழ்த்துக்களை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Congratulations on ur debut film brother @isanjaybharathi ???????????????? Really sweet and funny teaser ???? all the best @iamharishkalyan brother and the entire team of #DhanusuRaasiNeyargalae ????????
— Arya (@arya_offl) November 19, 2019
Enjoy the teaser https://t.co/Y7siXrgG1o