முகப்புகோலிவுட்

ஹரிஷ் கல்யாணை விரட்டிப் பிடித்த விவேக்..! வைரலாகும் ’தாராள பிரபு’ ட்ரைலர்..!

  | February 25, 2020 12:52 IST
Dharala Prabhu

துனுக்குகள்

  • இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக தான்யா ஹோப் நடித்துள்ளார்.
  • நடிகர் விவேக் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
  • இப்படத்தை கிருஷ்ணா மாரிமுத்து இயக்கியுள்ளார்.

பாலிவுட்டில் மாபெரும் வெற்றி பெற்ற ‘விக்கி டோனர்' திரைப்படத்தின் தமிழ் ரீம்மேக்கான ‘தாராள பிரபு' திரைப்படத்தில் ஹரிஷ் கல்யான் நடித்து வருகிறார். விந்தணு தானத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் இப்படத்தை கிருஷ்ணா மாரிமுத்து இயக்குகிறார். இப்படத்தில் ஹரிஷுக்கு ஜோடியாக தான்யா ஹோப் நடிக்க, முக்கிய கதாப்பாத்திரத்தில் விவேக் நடிக்கிறார்.

இப்படத்திற்காக இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதிய ‘உன்னாலே பெண்ணே' என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில், இப்படத்தின் அதிகாரப்புரவ ட்ரைலர் நேற்று வெளியானது. மாறுபட்ட கதாப்பாத்திரங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படித்தியிருக்கும் ஹரிஷ் கல்யாண் மற்றும் விவேக் ஆகிய இருவருக்கும் இப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பைப் பெற்றுவருகிறது. தற்போது இந்த ட்ரைலர் செம வைரலாகிவருகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்