முகப்புகோலிவுட்

தென்மேற்கு சாரல் சின்னசாமி என்கிற பாரதிராஜா! இயக்குநர் இமயத்திற்கு ஹேப்பி பர்த் டே!

  | July 17, 2019 15:27 IST
Hbd Bharathiraja

துனுக்குகள்

 • தேசிய மற்றம் மாநில விருதுகளை பெற்றவர் இவர்
 • 16 வயதிலே படத்தை இயக்கும் போது இவருக்கு வயது 36
 • மணிவண்னன் சீமான் உள்ளிட்ட இயக்குநர்களை உருவாக்கியவர்
தேனி மாவட்டத்தில் இருந்து புறப்பட்ட தென்மேற்கு சாரல் பாரதிராஜா.இவரது இயற்பெயர் சின்னசாமி. தேனி மாவட்டம் அல்லி நகரில் பிறந்தவர்.
1977ம் ஆண்டு '16 வயதினிலே” படத்தில் தொடங்கியது இவருடைய திரைப்பயணம், அப்போது இவருக்கு வயதோ 36.
 
தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய இயக்குநர்களில் சமகாலத்தில் நம்மோடு வாழும் இயக்குநர் இமயம் பாரதிராஜாவிற்கு இன்று பிறந்தநாள்.
 மண்வாசம் மாறாதா பல படைப்புகளை தமிழ் சினிமாவிற்கு தாரைவாத்து கொடுத்தவர். காதல், உறவுகள், நட்பு, திரில்லர் என இவர் தொடாத சப்ஜெட்டுகலே இல்லை.  நீண்ட காலமாக அரங்கத்திற்குள்ளே எடுக்கப்பட்டு வந்த திரைப்படங்களை இயற்கையோடு இணைக்க வெளிபுற படப்பிடிப்புக்கு கொண்டு வந்த பெருமைகுரியவர்.

 
uls4j40o
 
கிராமம் என்றது ஆறு, ஓடைகள், மரங்கள், வயல்கள் என இப்படி பல அடையாளங்களோடு கிராமபுர மக்களின் வாழ்வியல் எளிமையானதாகவும், இயற்கையோடு ஒன்றியதாகவும் இருப்பதை கிராமங்களை நோக்கி பயணிக்கும் போது அறிந்துக்கொள்ள முடியும். அதனை யதார்த்தமாக பதிவு செய்து தமிழ் கலாச்சார பன்பாட்டை திரையிட்டு காட்டி தமிழ் திரையுலகின் திருப்பு முனையாக இன்றும் மிளிர்கிறார்.
 
பாக்யராஜ், ராதிகா, விஜயன், நிழல்கள் ரவி, கார்த்திக் ராதா, ரேவதி,பாபு, நெப்போலியன், ரஞ்சிதா போன்றவர்களை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர். மணிவண்ணன், மனோபாலா, சித்ரா, லெட்சுமணன்,மனோஜ் குமார், பொன்வண்ணன்,சீமான்,லீனா மணிமேகலை ஆகிய இயக்குநர்களை உருவாக்கியவர்.
 
தேசிய விருது, தமிழக அரசு விருது, ஆந்திர அரசு விருது, பத்மஸ்ரீ, கலைமாமணி, டாக்டர் பட்டம் என விருதுகளை நோக்கி இவர் வீசாத வலைகளில் சிக்கிய விருதுகள் ஏராளம். தமிழ் சினிமாவின் பெரும் அடையாளமாகவும்,  மண்ணின் மைந்தனாக , தமிழ் உணர்வாளராக கர்ஜித்துக்கொண்டிருக்கம் பாரதிராஜாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!!! 
 
 
 
 
 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com