முகப்புகோலிவுட்

மெட்ராஸ் கலைஞன் கார்த்திக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!!!

  | May 25, 2019 13:04 IST
Karthi

துனுக்குகள்

  • நடிகர் கார்த்திக்கு இன்று பிறந்த நாள்
  • மனிரத்னம் இயக்கும் பிரம்மாண்ட படத்தில் நடிக்கிறார்
  • இவர் அறிமுகமான முதல் படம் 'பருத்தி வீரன்'
தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் சிவக்குமாரின் இளைய மகன் கார்த்தி. அண்னன் சூர்யா முன்னணி நடிகரில் ஒருவர் என்கிற சினிமா பின்னணி கொண்டவராக இருந்தாலும் தனக்கென தனி ஸ்டைலை தமிழ் சினிமாவில் தடம் படத்தித்தவர் நடிகர் கார்த்தி.
 
இயக்குநர் மணிர்தனம் இயக்கிய ‘ஆயுத எழுத்து' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் இயக்குநர் அமீரின் இயக்கத்தில் வெளியான ‘பருத்தி வீரன்' படத்தின் மூலம் சிறந்த நடிகராக அறிமுகமாகினார். கலைத்திறன் மூலம் மாபெரும் வெற்றியை பெற்றார் இவர். முதல் படத்திலே தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருது, தனியார் தொலைக்காட்சியின் சிறந்த அறிமுக நடிகர் என பல்வேறு விருதுகளை கைப்பற்றினார்.

 
c8dq48hg

 
இப்படத்தைத் தொடர்ந்து ‘ஆயிரத்தில் ஒருவன்' , ‘பையா', ‘நான் மகான் அல்ல', சகுனி, என அடுத்தடுத்த படங்களில் முன்னணி நடிகராக உயர்ந்தார்.
 
இவர் நடிப்பில் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று', ‘மெட்ராஸ்' உள்ளிட்ட படங்கள் இவருக்கு மாபெரும் வெற்றிப்படங்களாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து முன்னணி இயக்நர்களின் இயக்கத்தில் தற்போது நடித்து வருகிறார்.

 
hjnll56

 
கிராமத்து வேடம், நகர்புர இளைஞன், என எந்த கதாபாத்திரத்திற்கு பொருந்திப்போகும் திறமையான நடிகர்.
 
சென்னைவாழ் எளிய இளைஞனாக இவர் நடித்த மெட்ராஸ் படம் இவருக்கு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது என்று சொன்னால் அது மிகையல்ல.
 
qtksgphg

 
மிடில் கிளாஸ் குடும்பக்கதை, காவல்துறை கதாபாத்திரம் என எந்த கதாபாத்திரம் கொடுக்கப்பட்டாலும் அதை நிதானமாகவும், தன்னம்பிக்கையோடும் செய்து முடிக்கும் ஆற்றல் படைத்தவர். இவரின் நடிப்பும், கதைத் தேர்வும் அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்திருகிறது என்றால் அது மிகையல்ல.  இத்தனை ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் இவர் கற்ற பாடங்கள் அதிகம். இன்னும் கற்றுக்கொண்டிருக்கிறார்.
 
அடுத்தடுத்து பல்வேறு இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றி வரும் கார்த்தி பல்வேறு சமூகம் சார்ந்த விஷயங்களிலும் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.
 
87hde5co

 
சிறந்த சமூக ஆர்வலராகவும் மக்கள் மனதில் வெற்றி கொடியை நிலைநாட்டி இருக்கிறார். தமிழ்நாட்டில் நலிந்து வரும் விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்கவும் அவர்களை ஊக்கப்படுத்தவும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார் இவர்.
 
இன்று பிறந்த நாள் காணும் கார்த்திக்கு எண்ணம் போல் எல்லாம் வெற்றிபெற இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!!!
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்