முகப்புகோலிவுட்

நா.முத்துகுமார் ஒரு சகாப்தம்! ஹேப்பி பர்த் டே !

  | July 12, 2019 16:52 IST
Na Muthukumar

துனுக்குகள்

  • நா.முத்துகுமார் கடந்த 2016ம் ஆண்டு இறந்தார்
  • இன்று நா முத்துகுமாரின் 44வது பிறந்த நாள்
  • இரண்டு தேசிய விருதுகளை வென்றவர் நா.முத்துகுமார்
ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழ் சினிமாவிற்கு புதிய புதிய கவிஞர்கள் கிடைத்துக்கொண்டே இருப்பார்கள். காலத்தால் அழியாத, அழிக்க இயலாத படைப்புகளை கொடுத்து செல்வார்கள். அப்படி ஆற்றல் மிக்க பல கவிஞர்களை காலம் சந்தித்திருக்கும்.
 
80களின் இறுதி காலகட்டத்தில் 90களின் தொடக்கத்திலும் பெரும் புயலும் தென்றலுமாய் தமிழ்சினிமாவை தன் வரிகளால் கட்டிப்போட்டவர் நா.முத்துகுமார்.
 
அனைவரையும் கட்டி இழுக்கும் அவரது கவிதைகளுக்கு வெயிலும் மழையும் அடிமைதான். ஆம் பெரும்பாலும் கவிஞர்கள் மழையை கொண்டாடிக் கொண்டிருந்த காலம் ''மழை மட்டுமா அழகு சுடும் வெயில் கூட ஒரு அழகு '' என வெயிலைக் கொண்டாடியவர்.
 
dm63ko2

 
அம்மாவுக்கான வரிகளை கேட்டு திளைத்துகொண்டிருந்த நேரத்தில் ''ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு'' என தந்தைக்கும் தாலாட்டு கொடுத்த பாடலாசிரியர். எளிய வார்த்தைகளால், உறவுகளுக்கு உயிர் கொடுத்து பாடலை கொண்டாடிய நா.முத்துக்குமாரின் 44-ஆவது பிறந்த நாள் இன்று.
 
 கருவறை இல்லை என்ற போதும் சுமந்திடத் தோணுதே... ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு என அன்னை அன்பிற்கு ஓய்வு கொடுத்து தந்தையையும் தாலாட்டு பாட செய்தவர்.
 
ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழை துளி கூட்டுகிறாய் 

என்று மகளின் அன்பை ரசிக்கும் தந்தைக்கு வார்த்தைகளை கொடுத்து அதற்கு தேசிய விருதையும் வென்றார்.
 
4687ni98

 காதல் உணர்வுகளை வார்த்தைகளாய் கொடுத்தவர், உறவின் வலிகளை உணர வைத்தவர், எளிய வார்த்தைகளால் ரசிக்க வைத்தவர், தமிழ் திரைப்படங்களுக்கு அழியா பாடல்களை கொடுத்தவர். திரைப்பட பாடல்கள் மட்டுமில்லை, கவிதை தொகுப்புகள், நாவல் என பல பரிமாணங்களில் வாழ்ந்தவர். வாழ்ந்துக்கொண்டிருப்பவர்.
 
சதையடைத்த உடலுக்கு தான் இழப்பும் இறப்பும். தமிழ் நிறைந்த கவிதைக்கு ஏது இறப்பு? உங்களுக்கு  பிறந்தநாள் வாழ்த்துகள்!
 
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்