முகப்புகோலிவுட்

மலராய் பூத்த அராத்து ஆனந்திக்கு பிறந்த நாள் வாழ்த்து...!#HBDSaipallavi

  | May 10, 2019 12:09 IST
Sai Pallavi

துனுக்குகள்

 • சாய் பல்லவிக்கு இன்று பிறந்த நாள்.
 • சூர்யா நடிக்கும் என்.ஜி.கே படத்தில் இவர் நடித்திருக்கிறார்
 • சாய் பல்லவிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
மலர் டீச்சருடைய நினைவுகளில் இருந்தே இன்னும் மீளாத ரசிகர்களுக்கு அராத்து ஆனந்தியாக அடுத்த அதிர்ச்சியை கொடுத்த நடிகை சாய் பல்லவிக்கு இன்று பிறந்தநாள்.
 
j43vq6g8

 
தமிழில் கடந்த 2005 ஆண்டு இயக்குநர் ஏ. கே. லோஹிதாதாஸ் இயக்கத்தில் வெளியான 'கஸ்த்தூரி மான்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சாய் பல்லவி. இதனைத் தொடர்ந்து 'தாம் தூம்' படத்தில் துணை நடிகையாக நடித்தார்.
 
vb000288

 
அதன் பின் இவர் நடிப்பதில் கவனம் செலுத்துவதை குறைத்துக்கொண்டு படிப்பதில் கவனம் செலுத்தத் துவங்கினார். படிப்பை துடிப்போடு முடித்துவிட்டு கடந்த 2015ம் ஆண்டு மலையாளத்தில் 'பிரேமம்' என்கிற படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்தார்.
 
gc6e713g


பெரும்பாலும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த புதுமுக நடிகைகளுக்கு தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கும். ஆனால் இந்த முறை தமிழ் நாட்டைச் சேர்ந்த மலர் டீச்சரின் அலை கேரள எல்லை வரை வீசியது.
 
63i18v78


குறைந்த காற்றழத்த தாழ்வு நிலையில் இருந்து நாளுக்கு நாள் வலுவடைந்து புயலாக மாறியது. கேரளாவில் தொடங்கிய மலர் டீச்சர் புயலின் தாக்கம் தென்னிந்திய மாநிலங்களின் உள்ள சினிமா ரசிகர்களை புரட்டி போட்டது.
 
5j5sehf8

 
"பிரேமம்" படம் சாய் பல்லவிக்கு திருப்பு முனையாக அமைந்தது. இந்த படத்தைத் தொடர்ந்து, அவருக்கு தென்னிந்திய மொழிப்படங்களில் இருந்து வாய்ப்புகள் வரத் தொடங்கியது. மீண்டும் அவர் மலையாளத்தில் 2016ம் ஆண்டு 'களி' படத்தில் நடித்தார்.
 
tjim0e6g

 
இந்த படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என நடிக்கத் தொடங்கினார். கடந்த ஆண்டு பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான மாரி 2 படத்தில் அராத்து ஆனந்தி கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
 
etrikc38

 
இந்த படத்தில் இடம் பெற்ற ரவுடி பேபி பாடல் தொடர்ச்சியாக பல கோடி ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது. சாய் பல்லவி சிறந்த நடிகை மட்டும் அல்ல சிறந்த நடனக்கலைஞரும் கூட. சிறந்த நடனக்கலைஞர் மட்டும் அல்ல இவர் நல்ல மருத்துவர். ஆம் இவர் படித்தது மருத்துவப்படிப்பு.
 
n1fod6bo

சினிமா ரசிகர்கள் இவருக்கு அளித்து வரும் ஆதரவும், சினிமா மீது இவருக்கு இருக்கும் காதலும் இவரை சினிமாவிலே தக்கவைத்துள்ளது தற்போது இவர் சூர்யா நடித்திருக்கும், என்.ஜி.கே படத்தில்  நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.
 
jvbaaj7g

 
சாய் பல்லவிக்கு சினிமா தன் பெருஞ்சிறகை கொடுத்திருக்கிறது. எல்லைகள் கடந்து பறக்கக்கூடிய நம்பிக்கையும் அள்ளிக்கொடுத்திருக்கிறது. பெரும் காதல் கொண்ட ரசிகர்களின்  பேராதரவுடன் இன்னும் பலத் திரைப்படங்களில் நடித்து பல்வேறு சாதனைகளை பெற வாழ்த்துவோம். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சாய் பல்லவி...
 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com