முகப்புகோலிவுட்

'Happy Birthday Sivakarthikeyan' - மாசாக வெளியான 'டாக்டர்' First Look

  | February 17, 2020 11:56 IST
Doctor Movie First Look

டாக்டர் படத்தின் 'First Look' வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது

துனுக்குகள்

 • 'Happy Birthday Sivakarthikeyan'
 • மாசாக வெளியான டாக்டர் பட 'First Look'
 • கையில் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் கத்தியுடன் அமர்ந்துருகிறார்
சிவகார்த்திகேயன் இன்று தனது 35-வது பிறந்த நாளை கொண்டாடிவருகிறார். பொறியியல் பட்டதாரியான சிவகார்த்திகேயன், மிமிக்கிரி ஆர்டிஸ்டாக நிகழ்ச்சியில் தோன்றி பின்னர் நிகழ்ச்சி தொகுப்பாளராக உயர்ந்தார். 2012ம் ஆண்டு வெளியான மரீனா என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார். கடந்த 8 ஆண்டுகளில் தனது கடுமையான உழைப்பினால் அடுத்த இளைய தளபதி இவர் தான் என்று பலரும் பாராட்டும் அளவிற்கு தனது தரத்தை உயர்த்தியுள்ளார். 
கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான நம்ம வீடு பிள்ளை, ஹீரோ ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது அயலான், டாக்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகின்றார். இன்று சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு டாக்டர் படத்தின் 'First Look' வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது. ரத்த கரை படிந்த கையுறைகளுடன் ஒரு கையில் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் கத்தியுடன் அமர்ந்துருகிறார் சிவகார்த்திகேயன். 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com