முகப்புகோலிவுட்

தமிழ்தாய் பெற்றெடுத்த கருப்பு முத்து கவிபேரரசர் வைரமுத்து; பிறந்த நாள் வாழ்த்துகள்!!

  | July 13, 2019 16:21 IST
Hbd Vairamuthu

துனுக்குகள்

  • வைகரை மேகங்கள் இவருடைய முதல் பாடல்
  • தமிழ் நாடு அரசரவைக் கவிஞராக இருந்தவர் இவர்
  • சாகித்ய அகாதமி, பத்ம பூஷன் ஆகிய விருதுகளை பெற்றவர் இவர்
பட்டிதொட்டி எங்கும் இவர் பாட்டொலிக்கும் கவிதை வரிகளில் தென்றல் இசைக்கும் மண்வாசம் மாறாத தாய் மொழியாம் தமிழ்தாய் ஈன்றெடுத்து கருப்பு முத்து வைரமுத்துவின் பிறந்தநாள் இன்று. பட்டுக்கோட்டை கல்யான சுந்தரம், கவிஞர் கண்ணதாசன், வாலி போன்ற ஜாம்பவான்களி வரிசையில் மெல்ல நடைபோட்டு எட்டாத உயரங்களை எழுத்தாற்றலில் எட்டி பிடித்தவர் இவர்.
 
தமிழ் கொடை வழங்கியிருக்கும் கவிபேரரசு, பொன்மாலை பொழுதில் தொடங்கிய இவரது இசை பயணம் இரவு பகல் பாராமல் ஒலித்துக்கொண்டிருக்கிறது. 5800 பாடல்கள் சரித்திரத்தின் முன்னும் பின்னுமாக நிரம்பிக்கிடக்கிறது.
 
“வைகரை மேகங்கள்', ‘திருத்தி எழுதாத தீர்ப்புகள்', ‘இன்னொரு தேசிய கீதம்', ‘எனது பழைய பனையோலைகள்', ‘கவிராஜன் கதை', ‘இரத்த தானம்', ‘இந்த பூக்கள் விற்பனைக்கு அல்ல', ‘தமிழுக்கு நிறமுண்டு', ‘ பெய்யென பெய்யும் மழை', ‘எல்லா நதிகளிலும் எங்கள் ஓடங்கள்', ‘ கொடி மரத்தின் வேர்கள்' இவர்களின் கவிதை தொகுப்புகள் காற்றில் கலந்த ஆக்சிஜனாய் பரவிக்கிடக்கிறது.
 
வெள்ளப்பெருக்கெடுத்து உருண்டோடும் ஆறு போகிறபோக்கில் கையை பிடித்துக்கொண்டு மழைத்துளிகளை இழுத்தோடுவதுபோல் இவரது நாவல்களை அடுத்த தலைமுறைகளையு கடந்து சென்று கொண்டிருக்கிறது.
 
‘தண்ணீர் தேசம்' நாவல் காதலி தண்ணீரை காதலி, கருவரையில் இருந்தே உன்னோடு பயனிக்கு இந்த தண்ணீரை காதலிக்க உணக்கென்ன தயக்கம் என உலகிற்கும் உயிருக்கும் தண்ணீரோடு உள்ள இனக்கத்தை வெளிப்படுத்தியது.
 
மன்வாசம் மாறாத எழுத்துகள் மூலம் ஒரு கிராமத்து வாழ்வியலை திரையிடும் கள்ளிக்காட்டு இதிகாசமும், கருவாச்சி காவியமும் காலத்தால் மட்டுமல்ல அந்த காலனாலும் அழிக்க முடியாதது.
 
“ஆயிரந்தான் கவிசொன்னேன்
அழகழகாப் பொய் சொன்னேன்
பெத்தவளே ஒம்பெரும
ஒத்தவரி சொல்லலியே!” என கற்பனை வேறு எதார்த்தம் வேறு ஆனால் கற்பனைளே ரசிக்கக்கூடியதாக இருந்து வரும் சூழலில் யதார்த்த வாழ்வியலில் தாயுக்கும் மகனுக்கும் உள்ள உறவை பேச்சு மொழியில் பிச்சி திண்ண வைத்த கவிதையை கொடுத்தவர்.
 
 ஒன்றா இரண்டா என்னிக்கொண்டே போக இவரது படைப்கள் முடியக்கூடிய பயணம் அல்ல ஒவ்வொரு முடிவிலும் தொடங்கும் இன்னொரு தொடர்ச்சி அல்லவா!
 
கவிதைகளால் களம் அமைத்து பாடல்களால் படை திரட்டி, எழுத்துகளை ஆயுதமாக்கி  பல்வேறு விருதுகளை வேட்டை ஆடியவர்!
 
தெளிவான பேச்சும், கம்பீரமான தோற்றமும், ஆற்றல் மிக்க எழுத்தும் உணர்வுகளை கட்டிப்போடும் கவிதைகளையும் இன்னும் நீங்கள் அள்ளி அள்ளிக்கொடுங்கள் திகட்டாத தீணியாய் நாங்கள் தினந்தோறும் அள்ளிப்பரும் அமிர்தம் உங்கள் எழுத்து இருக்கட்டும். சமகாலத்தில் எங்களோடு வாழும் கவிபேரரசுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்