முகப்புகோலிவுட்

'சொன்னதை செஞ்சுட்டார்யா' - அனைவரையும் நெகிழவைத்த இயக்குநர் மிஷ்கின்

  | February 28, 2020 10:10 IST
Myshkin

தற்போது படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தான் சொன்னதை நிரூபித்து காட்டியுள்ளார் இயக்குநர் மிஷ்கின்

துனுக்குகள்

 • தான் சொன்னதை நிரூபித்து காட்டியுள்ளார் இயக்குநர் மிஷ்கின்
 • தம்பி ராம் படம் பார்க்க கூப்பிட்டான்
 • படம் பார்க்க ஆரமச்ச கொஞ்ச நேரத்துல என்னோட தலைவலி விட்ருச்சு
தரமான படங்களை எடுப்பது மட்டும் இல்லாமல், ஒரு நல்ல படம் வெளியாகும்போது அதைப் பாராட்டும் குணமும் அதிகம் கொண்டவர் இயக்குநர் மிஷ்கின். கடந்த வெள்ளிக்கிழமை இயக்குநர் பிரியா கிருஷ்ணசுவாமி இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்புடன் திரையில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் தான் தேசிய விருது பெற்ற 'பாரம்' என்ற திரைப்படம். இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது அந்த நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய மிஷ்கின், தம்பி ராம் படம் பார்க்க கூப்பிட்டான், நானும் நல்ல தலைவலியோடு தான் படம் பார்க்கப் போனேன். ஆனா படம் பார்க்க ஆரமச்ச கொஞ்ச நேரத்துல என்னோட தலைவலி விட்ருச்சு என்று கூறினார். 

பாரம் படத்தையும், அந்த படத்தின் இயக்குநரையும் பெரிய அளவில் பாராட்டிய பேசிய மிஷ்கின், இந்த படம் சைக்கோ படத்தை விட நல்ல படமென்று கூறினார். மேலும் இந்த படம் வெளியாகும்போது நானே களத்தில் இறங்கி போஸ்டர் ஒட்டுவேன் என்று கூறினார். தற்போது படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தான் சொன்னதை நிரூபித்துக் காட்டியுள்ளார் இயக்குநர் மிஷ்கின்.

பாரம் படத்திற்காக மிஷ்கின்  தனது சொந்த செலவில் விளம்பர போஸ்டர்களை ஒட்டியுள்ளார். மலர் சினிமா என்ற செய்தி நிறுவனம் மிஷ்கின் போஸ்டர்களை ஒட்டும் அந்த காட்சிகளைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மிஷ்கினின் இந்த செயல் தன்னை கண்கலங்க வைப்பதாக அந்த படத்தின் இயக்குநர் பிரியா கிருஷ்ணசுவாமி கூறியதாகத் தகவல் தெரிவிக்கின்றன. 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com