முகப்புகோலிவுட்

"அவர் கன்னத்தில் ‘இச்’சினேன்" - அஸ்வந்த்தை புகழ்ந்த பார்த்திபன்

  | April 04, 2020 17:04 IST
Parthiban Tweet

துனுக்குகள்

 • அதில் முக்கியமானவர் தான் இயக்குநர் பார்த்திபன்
 • இந்நிலையில் நேற்று பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில்
 • Video-வை Show-வினார் நான் 'Awe'-வ்வி அவர் கன்னத்தில்
தமிழ் சினிமா ஆரம்ப காலத்தில் இருந்து இயக்குநர்களுக்கு பெரும் அளவு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு திரையுலகமாக திகழ்கின்றது. தமிழ் சினிமா இயக்குநர்கள் என்று வரும்போது அதில் நிச்சயம் தனக்கான தனி இடத்தை வகிப்பார் இயக்குநர் பாக்கியராஜ். 16 வயதினிலே படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான அவர் சிகப்பு ரோஜாக்கள் படத்தின் மூலம் எழுத்தராக வளர்ச்சி அடைந்தார். அதன் பிறகு 'சுவரில்லா சித்திரத்தால்' இயக்குநராக களமிறங்கினார். இவர் மட்டும் அல்ல அவருடைய சிஷ்யர்கள் பலரும் இன்று மாபெரும் இயக்குநர்களாக வலம்வருகின்றனர். 

அதில் முக்கியமானவர் தான் இயக்குநர் பார்த்திபன், புதிய பாதை மூலம் தனது தனி பாதையை வகுத்து அதன் வழி நடந்து வருகின்றார். இவர் கிறுக்கல்களும் பல கவிதை சொல்லும், தான் எடுத்த படம் மட்டும் இன்றி இவர் நடித்த பல படங்களிலும் இவர் நடிப்பு பலராலும் வியந்து பாராட்டப்பட்டுள்ளது. தற்போது உலகில் குறிப்பாக இந்தியாவில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில், அனுதினம் மக்களுக்கு விழிப்புணர்வு வீடியோக்களை அளித்து வருகின்றார் பார்த்திபன். அது மட்டும் இல்லாமல் மருத்துவ வசதிக்காக தனது வீட்டைத் தர தயார் என்றும் அவர் கூறினார்.         
இந்நிலையில் நேற்று பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது குறித்து அவர் கூறியபோது "நான் ஒரு பெரிய மனிதரை சந்தித்தேன்.கிட்டத்தட்ட என் உயரமிருந்தார்,நான் அமர்ந்திருந்த போது! LOVE ME DO என்றொரு Video-வை Show-வினார் நான் 'Awe'-வ்வி அவர் கன்னத்தில் ‘இச்'சினேன் நீங்களும் இதை பார்த்து அவரை மெச்சுங்களேன்!".. என்று கூறினார்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com