முகப்புகோலிவுட்

கோகுல் இயக்கத்தில் ‘Helen’ தமிழ் ரீமேக்; கசிந்தது தலைப்பு..!!

  | August 04, 2020 15:55 IST
Helen

இப்படத்தில் அப்பா மகளாக அருண் பாண்டியன் மற்றும் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் நடிக்கின்றனர்.

2019 இறுதியில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான மலையாள திரைப்படம் ‘ஹெலன்'. தந்தை-மகள் உறவைப் பற்றிய இந்த அழகிய திரைப்படத்தின் அன்னா பென் மற்றும் லால் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘ஹெலன்' படத்தின் தமிழ் ரீமேக்கை ரௌத்திரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜுங்கா ஆகிய படங்களை இயக்கி புகழ்பெற்ற இயக்குநர் கோகுல் இயக்கிவருகிறார். தமிழில் இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களான அப்பா மகளாக நடிகர் அருண் பாண்டியன் மற்றும் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு நிறைவடையும் தருவாயில் உள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு குறித்த தகவல் கசிந்துள்ளது. அதாவது படக்குழு இப்படத்துக்கு ‘அன்புக்கு இனியாள்' என தலைப்பை தேர்ந்தெடுத்துள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகி வருகின்றன. இது குறித்த அதிகார்ப்புர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.

இயக்குநர் கோகுல் இந்த லாக்டவுனில் தனது அடுத்த படமாக ‘கொரோனா குமார்' என்ற புதிய படத்தை அறிவித்துள்ளார். ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தில் உள்ள சில கதாப்பாத்திரங்கள் இதில் இடம்பெரும் என்றும், ‘மக்கள் செல்வன்' விஜை சேதுபதி இதில் கேமியோ ரோலில் நடிப்ப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.

சமீபத்தில் ‘Helen' ஹிந்தி ரீமேக் உரிமையை அஜித்தின் ‘வலிமை' பட தயாரிப்பாளர் போனி கபூர் பெற்றுள்ளார் என்றும், அதில் ஜான்வி கபூர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com