முகப்புகோலிவுட்

மாதவன் நடிப்பில் 'மாறா' - சுவாரசியமான புகைப்படங்களை வெளியிட்ட ஸ்ரீதேவி..!

  | September 22, 2020 11:04 IST
Maara

துனுக்குகள்

  • நடிகர் மாதவன் கடைசியாக திரையில் 4 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான
  • இதற்கிடையில், 2015ம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி பெரிதும் பாராட்டப்பட்ட
  • தற்போது இந்த படத்தில் இருந்து சில புகைப்படங்களை எழுத்தாளர் ஸ்ரீதேவி தனது
நடிகர் மாதவன் கடைசியாக திரையில் 4 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘விக்ரம் வேதா' படத்தில் கதாநாயகனாக விஜய் சேதுபதியுன் இணைந்து நடித்திருந்தார். அதன்பிறகு ‘மகளிர் மட்டும்' படத்தில் ஒரு கேமியோ ரோலில் காணப்பட்டார். அதன்பிறகு மாதவன் தன்னை இயக்குநராக அறிமுகப்படுத்திக்கொண்டு ‘ராக்கெட்ரி: நம்பி விளைவு' படத்தில் பணிபுரிந்து வந்தார்.

இதற்கிடையில், 2015ம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி பெரிதும் பாராட்டப்பட்ட ‘சார்லி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக் ‘மாறா' என்ற திரைப்படத்தை மாதவன் முடித்திருந்தார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ‘விக்ரம் வேதா' படத்தில் அவருடன் இணைந்து நடித்த ஷ்ரத்தா ஶ்ரீநாத் நடித்துள்ளார். ‘மாறா' பற்றிய சமீபத்திய புதுப்பிப்பு என்னவென்றால், இப்படத்தை தயாரித்துள்ள பிரமோத் ஃபிலிம்ஸ், அமேசான் பிரைமுடன் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆம், இந்த படம் விரைவில் நேரடியாக OTT தளத்தில் வெளியீட்டைக் காணவுள்ளது. வெளியீட்டுத் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இந்த படத்தில் இருந்து சில புகைப்படங்களை எழுத்தாளர் ஸ்ரீதேவி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ப்ரமோட் நிறுவனம் இந்த படத்தை இயக்க இந்த படத்தை திலீப் குமார் இயக்குகிறார். பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com