முகப்புகோலிவுட்

விண்ணையும் தாண்டி போவோம் வருவாயா..? - விக்னேஷ் சிவன் வரிகளில் 'நான் உன் ஜோஷுவா'..!!

  | July 16, 2020 11:22 IST
Naan Un Joshuva

துனுக்குகள்

 • 'பப்பி' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான வருணை வைத்து
 • இசரி கனேஷ் அவர்களின் மருமகன் தான் வருண் என்பது குறிப்பிடத்தக்கது
 • இந்த படத்தில் இருந்து நான் உன் ஜோஸுவா என்ற பாடல்
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தனுஷுடன் இணைந்து என்னை நோக்கி பாயும் தோட்டா, விகர்முடன் துருவ நட்சத்திரம் ஆகிய படங்களை இயக்கினார். அந்த இரண்டு படங்களின் ரிலீஸ் தேதிகள் தள்ளிப்போய்கொண்டே இருந்த நிலையில், 'பப்பி' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான வருணை வைத்து ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தை இயக்கினார். அந்த படத்துக்கு ‘ஜோஷுவா - இமை போல் காக்க' என தலைப்பிடப்பட்டது. இப்படத்தை கௌதம் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஒன்றாக எண்டர்டைன்மெண்ட் பேனரில் தயாரிக்க தொடங்கினார். தற்போது, இப்படத்தை வேல்ஸ் ஃபில்ம் இண்டர்னேஷனல் இசரி கனேஷ் வெளியிடுகிறார்.

இசரி கனேஷ் அவர்களின் மருமகன் தான் வருண் என்பது குறிப்பிடத்தக்கது, ஜோஷுவா திரைப்படத்தில் ராஹீ கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். இப்படத்துக்கு ENPT படத்துக்கு இசையமைத்த தர்புகா சிவா இசையமைத்துள்ளார். இப்படம் வரும் 2020 காதலர் தினத்தன்று திரைக்கு வரும் என படக்குழு அப்போது அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் கடந்த ஆண்டே இந்த படத்தின் டீஸர் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தில் இருந்து நான் உன் ஜோஸுவா என்ற பாடல் வெளியாகி உள்ளது. பிரபல பாடகர் கார்த்திக் இசையமைத்து பாட இந்த பாடலுக்கு அழகிய வரிகளை அளித்துள்ளார் பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com