முகப்புகோலிவுட்

விஷ்ணு விஷாலின் ‘ராட்சசன்-2’ அப்டேட் கொடுத்த இயக்குநர்..!

  | August 19, 2020 22:02 IST
Ratsasan

இந்த தகவல் விஷ்ணு-ராம்குமார் காம்போ ரசிகர்களுக்கு இனிமையானதாக அமைந்துள்ளது. விரைவில், படத்தின் மற்ற அப்டேட்டுகளை எதிர்பார்க்கலாம்..

நடிகர் விஷ்ணு விஷால் அடுத்தடுத்த சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அவர் தனது சினிமா வாழ்க்கையில் பல நம்பிக்கைக்குரிய இயக்குநர்களுடன் இணைந்துள்ளார். அவர்களில் ஒருவர் கவனிக்க வேண்டியவர் என்றால் அது இயக்குநர் ராம் குமார். விஷ்ணு விஷால் 2014-ஆம் ஆண்டில் வெளிவந்த ‘முண்டாசுபட்டி' என்ற நகைச்சுவை படத்திற்காக முதல் முறையாக இயக்குநர் ராம் குமாருடன் இணைந்தார். இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் சூப்பர் ஹிட் ஆகி, விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது. மீண்டும், ராம் குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்து 2018-ஆம் ஆண்டு வெளியான உளவியல் த்ரில்லர் படமான ‘ராட்சசன்' கோலிவுட் திரைப்பட ஆர்வலர்களை பெரிதும் கவர்ந்தது. விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது.

சமீபத்தில் ரசிகர் ஒருவர் 'முண்டாசுபட்டி' மற்றும் ‘ராட்சசன்' ஆகிய இரண்டு திரைப்படங்களையும் ஒப்பிட்டு, அதே இயக்குநர், அதே ஹீரோ, இரண்டு படங்களும் வெவ்வேறு உச்சம், ஆனால் இரண்டும் பிளாக்பஸ்டர் என்று விஷ்ணுவையும் ராம் குமாரையும் பாராட்டி மீம் வெளியிட்டிருந்தார். இதனை கவனித்த விஷ்ணு விஷால், தனது ட்விட்டர் பக்கத்தில் “ இயக்குநர் ராம் குமார்… 3வது எக்ஸ்ட்ரீமுக்கு காத்திருக்கிறேன்?” என்று பதிவிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து இந்த வெற்றிக் கூட்டணி விரைவில் மற்றோரு பிளாக்பஸ்டர் திரைப்படத்துக்காக மீண்டும் இணையவுள்ளனர் என்பது உறுதியானது.

இப்போது, விஷ்ணு ட்விட்டரில் இப்படம் குறித்து அளித்திருந்த ஒரு பதிலும், கேள்வியும் மற்றும் அதைதொடர்ந்து இயக்குநர் ராம் குமார் அளித்த பதிலும் படத்தை உறுதி செய்ததோடு, ஏராளமான ரசிகர்களின் எக்கமான ‘ராட்சசன்-2' படத்தின் முந்தைய தயாரிப்புப் பணியும் முன்னேற்றத்தில் இருப்பதையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவல் விஷ்ணு-ராம்குமார் காம்போ ரசிகர்களுக்கு இனிமையானதாக அமைந்துள்ளது. விரைவில், படத்தின் மற்ற அப்டேட்டுகளை எதிர்பார்க்கலாம்..

ஸ்கிரிப்டுகள் தேர்வு செய்வதற்காகவும், தனது சிறப்பான நடிப்புக்காகவும் ரசிகர்களிடமிருந்து அதிக பாராட்டுக்களைப் பெற்று வரும் விஷ்ணு, தற்போது ‘காடன்', ‘ஜகஜால கில்லாடி', ‘எஃப்.ஐ.ஆர்' மற்றும் ‘மோகன் தாஸ்' ஆகிய படங்களை கைவசம் கொண்டுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com