முகப்புகோலிவுட்

"உலகத்தில் முதல் நிறம் தமிழ் நிறம் தான்" - அதிரடியாக வெளியான "தமிழன் என்று சொல்லடா"..!

  | September 10, 2020 11:35 IST
Tamizhan Endru Solada

துனுக்குகள்

 • எம். குமரன், சந்தோஷ் சுப்பிரமணியம் தொடங்கித் தனி ஒருவன் மற்றும்
 • இந்நிலையில் ஜெயம் ரவி இன்று தனது பிறந்தநாளினை கொண்டாடி வரும்
 • இமான், அனிரூத் மற்றும் லாவண்யா சுந்தரராமன் ஆகியோர் குரலில் வெளியாகி
தெலுங்கு படங்களின் மூலம் அறிமுகமானாலும், தமிழில் 2003ம் ஆண்டு வெளியான ஜெயம் படத்தின் மூலம் தான் ஹீரோவாக தமிழில் அறிமுகமாகினார் ஜெயம் ரவி. இவர் பிரபல இயக்குநர் மோகன் ராஜா அவர்களின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. சினிமா பின்புலம் உள்ள குடும்பத்திலிருந்து வந்த நடிகர் என்ற போதும் தனது சிறந்த நடிப்பால் அவர் தற்போது முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார். 

எம். குமரன், சந்தோஷ் சுப்பிரமணியம் தொடங்கித் தனி ஒருவன் மற்றும் கோமாளி போன்ற படங்கள்வரை இவர் ஏற்று நடிக்காத கதைக்களம் இல்லை என்றே கூறும் அளவிற்குச் சிறந்த நடிகராக விளங்குகின்றார் ஜெயம் ரவி. தனி ஒருவன் மற்றும் மிருதன் ஆகிய படங்களின் இரண்டாம் பாகம் கண்டிப்பாக உண்டு என்பது எல்லோரும் அறிந்ததே என்றபோதும் அந்த படங்களை எதிர்நோக்கி அவருடைய ரசிகர்கள் காத்திருக்கின்றனர். விரைவில் இந்த படங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் ஜெயம் ரவி இன்று தனது பிறந்தநாளினை கொண்டாடி வரும் நிலையில் அவருடைய 25வது படமான 'பூமி' படத்தில் இருந்து மதன் கார்க்கி வரிகளில் இமான், அனிரூத் மற்றும் லாவண்யா சுந்தரராமன் ஆகியோர் குரலில் வெளியாகி வைரலாகி வருகிறது "தமிழன் என்று சொல்லடா" என்ற பாடல்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com