முகப்புகோலிவுட்

மக்கள் செல்வி நடிப்பில் 'COLORS' - First லுக் போஸ்டர் வெளியிட்ட நாயகி..!!

  | July 14, 2020 16:07 IST
Colors

துனுக்குகள்

 • நடிகர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமி சரத்குமார், தமிழில்
 • இந்த சிக்கலான ஊரடங்கு நிலவும் காலத்தில் தனது சமூக வலைத்தளங்கள்
 • 'கலர்ஸ்' திரைப்படத்தின் First லுக் போஸ்டர்கள்
நடிகர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமி சரத்குமார், தமிழில் போடா போடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார். அதன் பிறகு, பாலா இயக்கத்தில் வெளியான தாரைத்தப்பட்டை, மற்றும் சண்டக்கோழி, சர்கார் போன்ற படங்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதேபோன்று ஒவ்வொரு படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சில படங்களில் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடிக்கும் அளவிற்கு குறுகிய காலத்தில் இவர் தன்னை தயார்படுத்தி கொண்டுள்ளது இவரின் சிறப்பு. 

இந்த சிக்கலான ஊரடங்கு நிலவும் காலத்தில் தனது சமூக வலைத்தளங்கள் மூலம் பல விழிப்புணர்வுகளையும் குறிப்பாக  நடக்கும் வன்முறைகள் குறித்தும் அடிக்கடி இவர் பேசிவருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த 2020ம் ஆண்டு வரலட்சுமி நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 8க்கும் அதிகமான படங்கள் வெளிவர காத்திருக்கின்றன. 

இந்நிலையில் கடந்த 10ம் தேதி தனது நடிப்பில் வெளிவர உள்ள 'கலர்ஸ்' திரைப்படத்தின் First லுக் போஸ்டர்கள் சிலவற்றை வரலட்சுமி தனது த்விட்டேர் தலத்தில் வெளியிட்டார். பிரபல நடிகை இனியா இந்த படத்தில் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com