முகப்புகோலிவுட்

‘தளபதி66’ முதல் அப்டேட் இதோ.! மீண்டும் இணையும் ‘மெர்சல்’ கூட்டணி.!!

  | May 05, 2020 18:50 IST
Mersal

“மெர்சல் தோல்விப் படமல்ல என்பதை நான் மிகத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்"

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான படம் ‘மெர்சல்'. இந்த படத்தில் முதல் முறையாக 3 வேடங்களில் நடித்து மாஸ் காட்டியிருந்தார் ‘தளபதி' விஜய். இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படம் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படமாக வெளியானது.

மெரசலை அடுத்து, ‘சர்கார்' மற்றும் ‘பிகில்' என வெற்றித் திரைப்படங்களை கொடுத்த விஜய் தற்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சேவியர் ப்ரிட்டோ தயாரிப்பில் ‘மாஸ்டர்' திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்து முடித்துள்ளார். கடந்த ஏப் ரல் 9-ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்த இப்படம், கொரோனா தொற்று காரணமாக விஜயின் பிறந்தநாளின் வெளியிடப்படலாம் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையில், ‘தளபதி 65' படத்தின் தகவல்களும் கசியத் துவங்கிவிட்டன. சன் பிக்சர்ஸ் மிக பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கவுள்ள இப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தற்போது விஜயின் 66வது திரைப்படத்தை ‘மெர்சல்' திரைப்படத்தை தயாரித்த ‘ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்' முரளி ராமசாமி தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மெர்சல், ஒரு தோல்வியுற்ற திரைப்படம் என்ற செய்தி பிரபலமாக பேசப்பட்டுவந்த நிலையில், சமீபத்தில் ஒரு ஆன்லைன் போர்ட்டலுக்கு பேட்டியளித்த தயாரிப்பாளர் முரளி ராமசாமி “மெர்சல் தோல்விப் படமல்ல என்பதை நான் மிகத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நானும் விஜயும் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம், பத்து நாட்களுக்கு முன்பு கூட நாங்கள் பேசினோம். சன் பிக்சர்ஸ் உடன் தனது அடுத்த படத்தை (தளபதி 65) முடித்த பிறகு, அவர் எனக்காக மீண்டும் ஒரு படம் நடித்துக் கொடுப்பதாக அவர் எனக்கு உறுதியளித்துள்ளார்.” என்று கூறியுள்ளார்.

இந்த கூட்டணியில் தயாராகும் திரைப்படம் ‘Thalapathy66'ஆக இருக்கும் என உறிதியாகவில்லை, ஆனால் முரளி ராமசாமியின் கூற்றுபடி, 'Thalapathy65' படத்துக்குப் பிறகு மீண்டும் விஜய் அடத்தை தயாரிக்கவுள்ளது ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com